உலகின் அதிவேக எஸ்யூவியாக வாகை சூடிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர்!

Written By:

எஸ்.யூ.வி ரக மாடலில் முன்னணி மாடலாக இருப்பது டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர். உலகளவில் வரவேற்பு பெற்ற இந்த கார், எஸ்.யூ.வி ரக கார்களில் அதிவேக கார் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. 

எஸ்.யூ.வி மாடல்கள் என்றாலே பெரும்பாலும் வேகத்தில் அசாத்திய ஆற்றல் பெற்றவையாக இருக்கும். ஆனால் லேண்ட் க்ரூஸர் அதற்கு ஒரு படி மேல போய், உலகின் சிறந்த வேகமான எஸ்.யூ.வி என்ற சிறப்பை அடைந்துள்ளது

ஒரு மணி நேரத்தில் சுமார் 370 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்ததன் காரணமாக இந்த சாதனையை தக்கவைத்துக்கொண்டுள்ளது டொயோட்டா லேண்ட் க்ரூஸர்.

லேண்ட் க்ரூஸரின் திறனை அறிய கலிஃபோர்னியாவின் மோஜவா விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதில் காரை ஒட்டிய முன்னாள் கார் பந்தய வீரரான கார்ல் எட்வார்ட்ஸ், லேண்ட் க்ரூஸரில் 370 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் பயணித்து இலக்கை அடைந்தார்.

4 கிலோ மீட்டர் ரன்வே கொண்ட மொஜ்வா விமான நிலையத்தில், லேண்ட் க்ரூஸரின் பயணத்தை குறித்த அனைத்து விவரங்களையும் ஜி.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்பட்டது.

டொயோட்டா மோட்டார்ஸ்போர்ட்ஸ் தொழில்நுட்ப மையத்தை சார்ந்த பல பொறியாளர்களின் தீவிர முயற்சியினால் லேண்ட் க்ரூஸர் கார் இன்று இத்தகைய பெருமையை அடைந்துள்ளது.

லேண்ட் க்ரூஸர் காரின் 5.7 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றலை பூஸ்ட் செய்வதற்காக காரெட் நிறுவனத்தின் டர்போசார்ஜ்கள் இணைக்கப்பட்டுள்ளன

எஞ்சினுடன் ஸ்டர்டியர் என்ற நிறுவனத்தின் பிஸ்டன்கள் மற்றும் ராடுகள் ஆகியவையும் பொருத்தப்பட்டன.

இந்த மேம்படுத்தப்பட்டுள்ள மாடலில் புதியதாக இடம்பெற்றுள்ள இந்த எஞ்சின் 2000 பி.எச்.பி பவரை தர வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை பெரிய மாற்றங்களை எஞ்சினில் மேற்கொண்டதன் மூலம், காற்றுயிக்கவியல் செயல்பாட்டில் புதிய ஆற்றலை இந்த காருக்கு வழங்கியது.

மொஜ்வா விமான நிலையத்தில் புதிய எஞ்சின் பொருத்தப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூஸிற்கான சோதனை ஓட்டம் இரண்டு முறை நடத்தப்பட்டது.

முதல் முறையில் இயக்கத்தின் போது ரேஸர் எட்வெர்டால் ஒரு மணி நேரத்தில் 340 கிலோ மீட்டரை தான் அடைய முடிந்தது.

பிறகு பொறியாளர்கள் காரை அதிகமாக பூஸ்ட் செய்தனர். இதனால் 2வது ஓட்டத்தின் போது லேண்ட் க்ரூஸர் கார் ஒரு மணி நேரத்தில் 370 கிலோ மீட்டரை அடைந்தது.

லேண்ட் க்ரூஸருக்கான புதிய வடிவத்தை உருவாக்கிய பொறியாளர்களில் ஒருவரான கிரைக் ஒரு மணி நேரத்தில் 370 கிலோ மீட்டரை அடைந்ததன் மூலம், உலகளவில் எஸ்.யூ.வி கார்களில் வேகமான பாதுகாப்பான காராக லேண்ட் க்ரூஸர் மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்தில் 370 கிலோ மீட்டரை லேண்ட் க்ரூஸர் அடைந்திருந்தாலும். இந்த சாதனை டொயோட்டா நிறுவனத்திற்கு திருப்தியாக இல்லை.

இந்த திறனை மேலும் அதிகரிக்க, டொயோட்டா நிறுவனம் லேண்ட் க்ரூஸரை இன்னும் வலிமைப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
The Toyota Land Speed Cruiser has broken the speed record to become the World's Fastest SUV. The SUV reached a speed of 370km/h to break the record.
Please Wait while comments are loading...

Latest Photos