ஆட்டோ ஓட்டுநருக்கு புதிய சுப்ரோ வாகனத்தை பரிசாக அளித்த மஹிந்திரா நிறுவன தலைவர்..! காரணம் இது தான்!!

Written By:

இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் விவசாயத்துறை முதல் விண்வெளித்துறை வரையிலான தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் நான்கு மற்றும் இருசக்கர வாகன விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது.

காலம் சென்ற ஜேசி மஹிந்திராவினால் மும்பையில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவரான ஆனந்த் மஹிந்திரா தாராள மனம் படைத்தவர் என பெயரெடுத்தவர்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மற்றும் சிந்துவிற்கு தார் ஜீப்-பை பரிசாக அளித்த இவர் தற்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு நான்கு சக்கர வாகனத்தை பரிசளித்துள்ளார்.

அட சாக்‌ஷி மற்றும் சிந்துவிற்கு பரிசளிக்க ஒரு பெரும் காரணம் இருந்தது, ஆனால் ஆட்டோ ஓட்டுநர் அப்படி என்ன செய்தார் பரிசளிக்க என்ற கேள்வி எழலாம்..!

கேரளாவைச் சேர்ந்த சுனில் என்ற ஆட்டோ ஓட்டுநர் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் டிசைன் மீது ஈர்ப்பு கொண்டவராவார்.

எனினும், ஸ்கார்பியோ கார் வாங்கும் அளவுக்கு பணவசதி இல்லாத காரணத்தால் தான் ஓட்டும் ஷேர் ஆட்டோவை ஸ்கார்பியோ போல கஸ்டமைஸ் செய்துள்ளார்.

சுனிலின் ஆட்டோவின் பின்பகுதி அப்படியே ஸ்கார்பியோ காரின் பின்பகுதி போலவே காட்சியளிக்கிறது.

ஸ்கார்பியோ காரின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாகவே, தன்னுடைய சொற்ப வருமானத்திலும் ஸ்கார்பியோ கார் போலவே தன் ஆட்டோவையும் மாற்றியமைத்துள்ளார் சுனில்.

ஸ்கார்பியோ போல மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவின.

பலதரப்பினரையும் கவர்ந்த சுனிலின் ஆட்டோ விரைவிலேயே டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

சுனிலில் ஆட்டோவால் ஈர்க்கப்பட்ட அனில் பனிக்கர் என்ற வலைவாசி ஒருவர், இந்த புகைப்படங்களை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவிற்கு டேக் செய்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.

ஸ்கார்பியோ டிசைன் எந்த அளவுக்கு இந்தியர்களை கவர்ந்துள்ளது என்று இந்த படங்கள் உணர்த்தும் என்று ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து அதில் ட்வீட் செய்திருந்தார்.

அனில் பனிக்கரின் இந்த ட்வீட்டை கண்ட ஆனந்த் மஹிந்திரா, ஸ்கார்பியோ போல் மாற்றியமைக்கப்பட்ட சுனிலின் ஆட்டோவால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.

அனிலில் ட்வீட்டிற்கு அளித்த பதிலில் இந்த ஆட்டோ ஓட்டுநர் இருப்பிடத்தை கண்டறிய உதவுங்கள் அவருக்கு மூன்று சக்கர வாகனத்திற்கு பதிலாக நான்கு சக்கர வாகனத்தை பரிசளிக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மஹிந்திரா நிறுவனத்தின் மியூசியத்திற்காக இந்த ஸ்கார்பியோ டிசைன் ஆட்டோவை வாங்க விரும்புவதாக்வும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டிருந்தார்.

ஒருவழியாக ஆனந்த் மஹிந்திராவின் டிவீட்டிற்கு பதில் கிடைத்தது. ஆம் ஆட்டோ ஓட்டுநரான சுனிலில் இருப்பிடத்தை கண்டறியப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சிறிய ஊரான புல்லாத் என்ற பகுதியில் சுனில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது ஸ்கார்பியோ டிசைன் ஆட்டோவிற்கு பதிலாக புதிய சுப்ரோ நான்கு சக்கர வாகனத்தை சுனிலிர்கு பரிசாக அளித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

ஸ்கார்பியோ டிசைன் ஆட்டோவிற்கு பதிலாக புதிய சுப்ரோ நான்கு சக்கர வாகனத்தை பரிசளித்த புகைப்படத்தையும் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆனந்த்.

சொன்னது போலவே நிஜத்திலும் செய்து காட்டிய ஆனந்த் மஹிந்திராவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.

புதிய சுப்ரோ வாகனத்தை பரிசாக பெற்ற ஆட்டோ ஓட்டுநரான சுனில் ஆனந்தின் செயலால் பூரிப்படைந்துள்ளார்.

Story first published: Thursday, May 4, 2017, 14:42 [IST]
English summary
Read in Tamil about Mahindra head anand mahindra gifts new supro for kerala auto driver. find out the reason.
Please Wait while comments are loading...

Latest Photos