கோஹ்லியின் ஆடி காரை வாங்கி தோழிக்கு பரிசளித்த கால் சென்டர் மோசடி மன்னன்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் ஆடி ஸ்போர்ட்ஸ் காரை கால்சென்டர் மோசடி மன்னன் சாகர் தாக்கூர் வாங்கி தனது தோழிக்கு பரிசளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Written By:

மும்பை அருகேயுள்ள தானே நகரில் செயல்பட்டு வந்த 7 கால் சென்டர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியின.

அமெரிக்காவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் விபரங்களை பெற்று, அவர்களிடம் இந்த கால் சென்டரை சேர்ந்த ஊழியர்கள் அந்நாட்டு வருமான வரித் துறை அதிகாரிகள் போல பேசி கோடிக்கணக்கில் பணம் கறந்தது அம்பலாமானது. இந்த போலி கால் சென்டர்கள் மூலமாக ரூ.500 கோடி மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், இந்த கால் சென்டர் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சாகர் தாக்கூர் என்ற 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதில் ஒன்றாக, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியிடமிருந்து அண்மையில் ஒரு ஆடி காரை வாங்கி தனது தோழிக்கு பரிசளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஆடி கார் பிரியர். அந்த நிறுவனத்தின் விளம்பர தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும், ஆடி ஆர்8 வரிசையில் வரும் புதிய மாடல்களை முதல் ஆளாக வாங்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், விராட் கோஹ்லியின் ஆடி ஆர்8 கார் ஒன்றை சாகர் தாக்கூர் வாங்கியிருக்கிறார். கடந்த மே மாதம் 7ந் தேதி ரூ.2.50 கோடி கொடுத்து அந்த காரை தாக்கூர் வாங்கியுள்ளார்.

அதனை தனது தோழிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், அந்த கார் இன்னமும் விராட் கோஹ்லி பெயரில்தான் உள்ளதாம். இன்னும் பெயர் மாற்றம் செய்யவில்லையாம். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆடி காரும் முக்கிய அத்தாட்சியாக போலீசார் சேர்த்துள்ளனர்.

இருப்பினும், விராட் கோஹ்லிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், தாக்கூரின் நடவடிக்கைகள் குறித்து தெரியாமல் விராட் கோஹ்லி விற்பனை செய்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உலகின் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஒன்றான ஆடி ஆர்8 கார் மிகவும் சக்திவாய்ந்த மாடல்களில் ஒன்று. இந்த காரில் இருக்கும் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவரையும், 560என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Saturday, October 29, 2016, 12:34 [IST]
English summary
Indian test captain Virat Kolhi's Audi R8 was bought by the person at the centre of a massive call centre scam.
Please Wait while comments are loading...

Latest Photos