புதிய பென்ட்லீ காரை க்றிஸ்லர் என பேட்ஜ் மாற்றி உரிமையாளர்... என்ன காரணமாம்?

வங்கதேசத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12எஸ் சொகுசு காரில் க்றிஸ்லர் 300சி காரின் பேட்ஜை ஒட்டப்பட்டு சாலைகளில் திரிந்ததை படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.

By Saravana Rajan

சாதாரண கார்களை விலை உயர்ந்த கார் மாடல் போல பேட்ஜ் ஒட்டி அலங்காரம் செய்து கொள்வது பலருக்கு வழக்கமான விஷயம். ஆனால், விலை உயர்ந்த காரை, அதனைவிட விலை குறைந்த காரின் பேட்ஜ் ஒட்டி யாரும் அழகு பார்ப்பார்களா என்ன?

அப்படி அவர்கள் குறைவான விலை காரின் பேட்ஜ் ஒட்டியிருந்தால் அதில் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கிறதே என்று அர்த்தம். அதுபோன்ற செய்தி ஃபேஸ்புக் வழியே வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

பென்ட்லீ காரை க்றிஸ்லர் என பேட்ஜ் மாற்றி இறக்குமதி செய்த கில்லாடி!

வங்கதேசத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12எஸ் சொகுசு காரில் க்றிஸ்லர் 300சி காரின் பேட்ஜை ஒட்டப்பட்டு சாலைகளில் திரிந்ததை, அந்நாட்டை சேர்ந்த கார் பிரியர்களின் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று படம் பிடித்துள்ளது.

பென்ட்லீ காரை க்றிஸ்லர் என பேட்ஜ் மாற்றி இறக்குமதி செய்த கில்லாடி!

அதற்கான காரணமும் நம்மை ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது. ஆம், இந்த பென்ட்லீ காரின் உரிமையாளர் இறக்குமதி வரியை தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பென்ட்லீ காரை க்றிஸ்லர் என பேட்ஜ் மாற்றி இறக்குமதி செய்த கில்லாடி!

அதாவது, வங்கதேசத்தில் கார்களுக்கு 400 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக வேறு பிராண்டு பெயரை பயன்படுத்தி அந்த காரை இறக்குமதி செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பென்ட்லீ காரை க்றிஸ்லர் என பேட்ஜ் மாற்றி இறக்குமதி செய்த கில்லாடி!

ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கு இணையான பிராண்டாக கருதப்படும் பென்ட்லீ தயாரிப்புகள் உலக அளவில் பல வாடிக்கையாளர்களின் கனவு மாடல். ஆனால், பெரும்பாலான நாடுகளில் இறக்குமதி வரி காரின் விலையைவிட பன்மடங்கு அதிகமாக இருப்பதால் இதுபோன்று பல மோசடிகள் செய்து அந்த கார்களை இறக்குமதி செய்கின்றனர்.

பென்ட்லீ காரை க்றிஸ்லர் என பேட்ஜ் மாற்றி இறக்குமதி செய்த கில்லாடி!

படத்தில் இருக்கும் இந்த பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12 எஸ் காரில் 6.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 626 பிஎச்பி பவரையும், 820 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பென்ட்லீ காரை க்றிஸ்லர் என பேட்ஜ் மாற்றி இறக்குமதி செய்த கில்லாடி!

இந்த சக்திவாய்ந்த பென்ட்லீ சொகுசு கார் பல கோடி விலை மதிப்பு கொண்டது. ஆனால், இறக்குமதி செய்யும்போது அதன் விலை பன்மடங்கு அதிகமாக இருப்பதால் இதுபோன்று செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A person in Bangladesh has re badged his Bentley Flying Spur with Chrysler ones to evade taxes.
Story first published: Tuesday, November 8, 2016, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X