அப்போ, லம்போர்கினி வச்சிருந்தாலும் வேஸ்ட்தானா?!!!

இங்கிலாந்தில் ஃபெராரி, லம்போர்கினி உள்ளிட்ட கார்களை வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கான ஒரு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளார் கோடீஸ்வரர் ஒருவர்.

இந்த இணையதளத்தின் அரும் பணி என்ன தெரியுமா? காஸ்ட்லி கார் வைத்திருந்தும், டேட்டிங் செல்ல சரியான பெண்கள் கிடைக்காமல் அல்லாடுபவர்களுக்காகத்தான் இந்த வெப்சைட்டை இந்திய வம்சாவளி புண்ணியவான் ஒருவர் திறந்துள்ளார். லம்போர்கினி, ஃபெராரி இருந்தாலும் என்ன பிரயோஜனம்... சிக்கல்களை ஸ்லைடரில் காணுங்கள்.

 01. அந்த புண்ணியவான் யார்?

01. அந்த புண்ணியவான் யார்?

இந்த இணையதளத்தை திறந்து புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சா வளி கோடீஸ்வரர் சங்கீத் சேகராம். இந்த இணையதளத்தை சங்கீத் திறக்க என்ன காரணம் தெரியுமா?

 02. விரக்தியில் முளைத்த வெப்சைட்

02. விரக்தியில் முளைத்த வெப்சைட்

கையில் கோடிகோடியாய் பணமிருந்தும் தன்னிடம் இருக்கும் காஸ்ட்லி காரில் தனது பக்கத்தில் அமர்ந்து டேட்டிங் செல்ல சரியான பெண் கிடைக்கவில்லையாம். விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த வெப்சைட்டாம்.

 03. புண்ணியமில்லாத லம்போ

03. புண்ணியமில்லாத லம்போ

சங்கீத்திடம் லம்போர்கினி மூர்சிலாகோ எல்பி640 ஸ்போர்ட்ஸ் கார் இருக்கிறது. இருந்து என்ன பிரயோஜனம். 3 லட்சம் யூரோ மதிப்புடைய இந்த காரை வைத்திரு்நதும், டேட்டிங் செல்ல தனது எதிர்பார்ப்புக்கு தக்க பெண் கிடைக்கவில்லையாம். இதற்காக தீவிர யோசித்ததன் விளைவுதான் இந்த வெப்சைட்.

 04. இரட்டை பயன்

04. இரட்டை பயன்

நான் திறந்திருக்கும் இந்த இணையதளம் காஸ்ட்லி கார் உரிமையாளர்களுக்கும், அவர்களது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் சிந்தனையொத்த தோழி கிடைப்பதற்கும் வழி செய்யும். அதிசக்திவாய்ந்த கார்களில் செல்வது மட்டுமின்றி, சொகுசான வாழ்க்கையை இனிதாக அனுபவிக்கவும் இந்த வெப்சைட் உதவும் என்கிறார் சங்கீத்.

05. சில சமயம்

05. சில சமயம்

கார் உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி, கோடீஸ்வரர்களுடன் டேட்டிங் செல்ல விரும்பும் பெண்கள் மற்றும் கார்களை விரும்பும் பெண்களுக்கும் இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும். ஆனால், கார் வைத்திருந்தாலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

06. அது எப்படி?

06. அது எப்படி?

உதாரணமாக, ஃபெராரி காரை விரும்பும் பெண் என்றால், அந்த காரை வைத்திருக்கும் கோடீஸ்வரர்களை அந்த பெண் தேர்வு செய்து டேட்டிங் செல்ல முடியும். அந்த பெண்ணை லம்போர்கினி கார் வைத்திருப்பவர் விரும்பினாலும், டேட்டிங் செல்ல இயலாது.

07. லம்போ இருந்தாலும் வேஸ்ட்...

07. லம்போ இருந்தாலும் வேஸ்ட்...

"என்னிடம் லம்போ இருந்தாலும், எனக்கு அந்த பெண்ணுடன் டேட்டிங் செல்ல விரும்பினாலும், அந்த பெண் ஃபெராரியை விரும்பினால், நான் லம்போ வைத்திருந்தும் வேஸ்ட்தான்," என்று நகைச்சுவையாக சங்கீத் குறிப்பிடுகிறார்.

08. ட்ரெட்மார்க்

08. ட்ரெட்மார்க்

இந்த இணையதளத்துக்காக 4 ட்ரேட்மார்க் சின்னங்களை சங்கீத் பதிவு செய்துள்ளார். இதனை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

09. தகவல் பரிமாற்றம்

09. தகவல் பரிமாற்றம்

கார் உரிமையாளர்களும், டேட்டிங் செல்ல விரும்பும் பெண்களும் தங்களை பற்றிய அடிப்படைத் தகவல்கள் மற்றும் விருப்பங்களை இந்த இணையதளத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இதனை தெரிந்துகொண்டு சரியான துணையை தேர்வு செய்ய முடியும்.

10. தகுதியுடைய கார்கள்

10. தகுதியுடைய கார்கள்

இந்த பிரத்யேக சமூக வலைதளத்தில் இணைந்துகொள்வதற்கு போர்ஷே, அஸ்டன் மார்ட்டின், ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ, ஃபெராரி, லம்போர்கினி, மஸராட்டி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட்ரோவர் கார்களின் உரிமையாளர்கள் பதிவு செய்ய முடியும். ஆனால், சில பிராண்டுகளுக்கு இடமில்லையாம்.

11. தகுதி பெறாத மாடல்கள்

11. தகுதி பெறாத மாடல்கள்

இந்த இணையதள சமூகத்தில் சுபரு மற்றும் மிட்சுபிஷி போன்ற பிராண்டுகளின் விலையுயர்ந்த கார்களுக்கு இடமில்லையாம். இந்த கார் உரிமையாளர்களின் லைஃப் ஸ்டைல் வேறு மாதிரி இருப்பதால், அவர்களுக்கு வேறு மாதிரி யோசித்து வருகிறாராம் சங்கீத்.

12. கட்டணம்

12. கட்டணம்

இந்த பிரத்யேக சமூக தளத்தில் சேர்வதற்கு மாதத்திற்கு 65 பவுண்ட்டுகளும், ஆண்டுக்கு 380 பவுண்ட்டுகளும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

13. உறுப்பினர்கள்

13. உறுப்பினர்கள்

மாதத்திற்கு 20 முதல் 30 சதவீதம் வரை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சங்கீத் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

 14. உறுப்பினர் வாய்ப்பு

14. உறுப்பினர் வாய்ப்பு

இங்கிலாந்தில் 4 லட்சம் சூப்பர் கார் உரிமையாளர்கள் இருக்கின்றனர். எனவே, இந்த சமூக வலைதளத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சங்கீத்.

 15. அதிர்ஷ்டகாரர்கள்

15. அதிர்ஷ்டகாரர்கள்

இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த சமூக வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

 16. விரிவுப்படுத்தும் முயற்சி

16. விரிவுப்படுத்தும் முயற்சி

வட அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்களும் இதில் பதிவு செய்துகொள்வதற்கான வசதி விரைவில் வழங்கப்பட உள்ளது.

17. அந்த வெப்சைட்...

17. அந்த வெப்சைட்...

அந்த சமூகவலைதளத்தின் பெயர் சூப்பர்கார்டேட்டிங்.காம். இது போதாதா, அந்த இணையதளத்தை பிரிச்சிமேயறதுக்கு...!! சூப்பர் கார் இல்லாதவங்களுக்கும் ஆப்ஷன் இருக்காம்.!! அது என்ன, நிபந்தனைகளை மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று காணலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Dating Website For Supercar Owners: Does India Need Something Like This or Is There Anything In India Like This?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X