ஏலத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பழைய லிமோசின் கார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பயன்படுத்திய லிமோசின் கார் ஏலத்திற்கு வந்துள்ளது.

By Saravana Rajan

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும் கோடீஸ்வரர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் விசேஷ விமானங்கள், லிமோசின் ரக கார் போன்றவற்றை சொந்தமாகவே வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு செல்வந்தர்.

இந்த நிலையில், அவர் பயன்படுத்திய அரிய வகை லிமோசின் கார் இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள், அந்த காரின் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஏலத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பழைய லிமோசின் கார்!

1988ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கேடில்லாக் நிறுவனத்தின் லிமோசின் ரக கார் இது. கேடில்லாக் டிரம்ப் என்ற பெயரிலேயே இந்த கார் தயாரிக்கப்பட்டது. வெறும் 2 கார்கள் மட்டுமே இந்த மாடலில் தயாரிக்கப்பட்டன என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஏலத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பழைய லிமோசின் கார்!

கேடில்லாக் நிறுவனமும், தில்லிங்கர் கெயின்ஸ் கோச் ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த காரை தயாரித்தன. அப்போது கேடில்லாக் பொது மேலாளராக இருந்த ஜான் க்ரெட்டன்பெர்கர் என்பவரிடம் அனைத்து வசதிகளுடன், அதிக ஹெட்ரூம் கொண்ட லிமோசின் கார் வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் தனது விருப்பதை தெரிவித்துள்ளார்.

ஏலத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பழைய லிமோசின் கார்!

அதன் அடிப்படையில் மிக தனித்துவமும், அதிக சிறப்பம்சங்களுடன் கொண்டதாக இந்த லிமோசின் காரை கேடில்லாக் நிறுவனம் மிகுந்த சிரத்தையுடன் தயாரித்து கொடுத்தது. இந்த கார் டொனால்டு டிரம்ப் பெயரில் தயாரிக்கப்பட்டது. திரைப்படங்களிலும் தலை காட்டி பெருமை இந்த காருக்கு உண்டு.

ஏலத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பழைய லிமோசின் கார்!

மேலும், மெத்தை போன்ற சொகுசான இருக்கைகள், மினி பார் வசதி, பொழுதுபோக்கு வசதிகளுடன் இந்த கார் வடிவமைத்து தரப்பட்டது. ரோஸ்வுட் மர அலங்கார தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் சக்திவாய்ந்த 5.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த காரை டொனால்டு டிரம்ப் தனது அந்தஸ்தின் சின்னமாக பயன்படுத்தி வந்தார்.

ஏலத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பழைய லிமோசின் கார்!

இந்த நிலையில், மிக அரிய வகை மாடலாக போற்றப்படும் இந்த கார் தற்போது கார் சேகரிப்பாளர்களின் விருப்பமான மாடலாக மாறி இருக்கிறது. இதுவரை 5 உரிமையாளர்களிடம் கைமாறி விட்டது. தற்போது ஒரு கார் சேகரிப்பாளரிடம் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஏலத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பழைய லிமோசின் கார்!

இந்த நிலையில், இந்த காரை விற்க அவர் முடிவு செய்துவிட்டார். இங்கிலாந்தை சேர்ந்த "எக்ஸ்சேஞ்ச் அண்ட் மார்ட்" என்ற ஏல இணையதளத்தில் இந்த கார் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 50,000 பவுண்ட் அடிப்படை விலையில்,[ இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம்] இந்த கார் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த கார் 72,420 கிமீ தூரம் ஓடியிருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர் தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Cadillac Trump was jointly developed by Cadillac and Dillinger/Gaines Coachworks.
Story first published: Tuesday, February 21, 2017, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X