ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினா எவ்வளவு தூரம் போகலாம்? ஊரில் இருக்கும் எல்லாரும் புக் செய்யும் காரின் மைலேஜ்!

ரெனால்ட் (Renault) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய டஸ்டர் காரை ரூ.10.49 லட்சத்தில் அறிமுகப்படுத்தியது. ஆர்-பாஸ் (R-Pass) மூலமாக வாங்குபவர்களுக்கு ரூ.10.29 லட்சம் மட்டுமே விலை என அறிவிக்கப்பட்டதை எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் இந்த புதிய ரெனால்ட் காரில் எவ்வளவு தொலைவிற்கு செல்லலாம் என்கிற சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என இரு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி சமயத்தில் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன் புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

renault duster suv car mileage

இதில், 1.3 லிட்டர் டர்போ என்ஜினில் எவ்வளவு மைலேஜ் (Mileage) பெறலாம் என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. புதிய டஸ்டரில் 1.3 லிட்டர் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம். இதில், மேனுவல் கியர்பாக்ஸில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகப்பட்சமாக 17.75 கிமீ மைலேஜை பெறலாம் என ARAI சான்றளித்துள்ளது.

அதேநேரம், 6-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் டஸ்டரை வாங்கினால் சற்று அதிகமாக 18.45kmpl மைலேஜை பெறலாம். மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்துடன் இணைந்து ரெனால்ட் இந்த புதிய 1.3 லிட்டர் டர்போ என்ஜினை உருவாக்கியது. எரிபொருள் வீணாகுவதை தடுக்கும் விதமாக உராய்வினால் பாதிப்பு அடையாத பாகங்கள் உடன், அதிக அழுத்தத்தில் எரிபொருளை வழங்கக்கூடியதாக ரெனால்ட்டின் இந்த புதிய என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.

renault duster suv car mileage

இதனாலேயே புதிய டஸ்டர் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே இந்த என்ஜின் கிடைக்கும். அதிகப்பட்சமாக 163 பிஎஸ் மற்றும் 280 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மூலம் இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்கள் பிரிவில் பவர்ஃபுல்லான காராக டஸ்டர் உருவெடுத்துள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் விரைவான கியர் சேஞ்ச்களை இந்த என்ஜின் உறுதி செய்கிறது. மேலே கூறப்பட்ட ரூ.10.49 லட்சம் என்பது 1 லிட்டர் டர்போ என்ஜின் உடன் புதிய ரெனால்ட் டஸ்டரின் விலையாகும். 1.3 லிட்டர் டர்போ என்ஜின் உடன் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.18.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் குறைந்தப்பட்ச விலை ரூ.14.49 லட்சம் ஆகும். அதென்டிக், எவால்யூஷன், டெக்னோ, டெக்னோ+, ஐகானிக் மற்றும் ஐகானிக் லாஞ்ச் எடிஷன் என 6 விதமான வேரியண்ட்களில் புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், அதென்டிக் வேரியண்ட்டை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 1.3 லிட்டர் டர்போ என்ஜின் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதன் மைலேஜ் விபரங்கள் வெளியிடப்படாதது மட்டும்தான் ஒரே குறையாக இருந்தது. தற்போது அதுவும் பாதி நிறைவேறி உள்ளது. முக்கியமான 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் எந்த அளவிற்கு இந்த கார் மைலேஜை வழங்கும் என்பது இன்னும் தெரியவில்லை. 1.3 லிட்டர் டர்போ என்ஜினும் முக்கியமான என்ஜினே ஆகும். 1 லிட்டர் என்ஜினில் இதனை காட்டிலும் அதிக மைலேஜை எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2026, 7:31 [IST]
English summary
Renault duster suv mileage details with 1 3 litre turbo petrol engine check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X