கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய டுகாட்டி பைக்... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

அதிவேகத்தில் வந்த டுகாட்டி பைக் ஒன்று விபத்தில் சிக்கியதில், அதனை ஓட்டியவர் தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் அந்த காட்சியை இங்கே காணலாம்.

மோட்டார்சைக்கிளில் செல்வோர் பாதுகாப்பு கவசங்களை அணியாமல் சென்றால் என்னவாகும் என்பதை உணர்த்தும் விதத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. குறிப்பாக, அதிசக்திவாய்ந்த மோட்டார்சைக்கிளை ஓட்டுவோர் பாதுகாப்பு கவசங்களை அணிந்து செல்வது அவசியம்.

அதிவேகத்தில் விபத்தில் சிக்கிய டுகாட்டி பைக் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

ஆனால், அதுபோன்று எந்த ஒரு பாதுகாப்பு கவசம் இல்லாமல் டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர் பைக்கை அதிவேகத்தில் ஓட்டி வந்தவர் திடீரென கட்டுப்பாட்டை இழக்கிறார். அந்த டுகாட்டி பைக் கட்டுப்பாட்டை இழந்த வேகத்தில் சாலையில் பல்டியக்கிறது.

அதிவேகத்தில் விபத்தில் சிக்கிய டுகாட்டி பைக் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

அதேவேகத்தில், அதனை ஓட்டி வந்தவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் பல மீட்டர் தூரம் அதிவேகத்தில் உருண்டு செல்கிறார். இதில், அந்த பைக்கை ஓட்டி வந்தவர் உடல் முழுவதும் படுகாயமடைந்து நினைவில்லாமல் கிடக்கிறார்.

அதிவேகத்தில் விபத்தில் சிக்கிய டுகாட்டி பைக் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

ஹெல்மெட், பாதுகாப்பு உடைகள் போன்ற எந்தவொரு கவசங்களையும் அணியாமல் வந்ததால், அவர் தலையிலும், உடலிலும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த தகவல் இல்லை. அதேநேரத்தில், அது பொது பயன்பாட்டு சாலையும் இல்லை என தெரிகிறது.

அதிவேகத்தில் விபத்தில் சிக்கிய டுகாட்டி பைக் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

ஆனால், இதுபோன்ற சூப்பர் பைக்குகளை ஓட்டும்போது பாதுகாப்பு கவசங்கள் என்பது மிக மிக முக்கியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. அட்லீஸ்ட் ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையில் காயம் ஏற்படாமல் தவிர்த்திருக்க வாய்ப்புண்டு.

அதிவேகத்தில் விபத்தில் சிக்கிய டுகாட்டி பைக் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

இந்த விபத்தில் ஓட்டியவரை போன்றே, அந்த டுகாட்டி பைக்கும் பலத்த பாதிப்புகளை சந்தித்தது. முற்றிலும் நொறுங்கி கிடக்கும் படங்களையும் பகிர்வதற்கு காரணம், குறைந்தபட்சம் சில படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

அதிவேகத்தில் விபத்தில் சிக்கிய டுகாட்டி பைக் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

இதுபோன்ற சம்பவங்கள் சூப்பர் பைக்குகளை கையாளும்போது எந்தளவு பயிற்சியும், நிதானமும் தேவை என்பதை உணர்த்துகின்றன. இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது பாதுகாப்பு கவசங்களை அணிந்து செல்ல அலட்சியம் காட்டாதீர்!

More from DriveSpark

Article Published On: Thursday, February 23, 2017, 9:37 [IST]
English summary
Here’s a video that shows what happens if essential motorcycle gear is ignored while riding a powerful motorcycle.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+