இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்... கார் கற்றுக் கொள்ளும்போது விபரீதம்!

இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்... கார் கற்றுக் கொள்ளும்போது விபரீதம்!

By Saravana Rajan

மும்பையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் ராய்[36]. ராணுவ வீரர். இவரது மனைவி சங்கீதா ராய்[34]. சம்பவத்தன்று சங்கீதா ராய் தனது கணவரிடம் கார் ஓட்ட கற்றுக் கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்.

மனைவி ஆசையுடன் கேட்டதையடுத்து, உடனடியாக கார் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார். சங்கீதாவை டிரைவர் சீட்டில் அமர வைத்துவிட்டு, பக்கத்து சீட்டில் சந்தோஷ்குமார் அமர்ந்து கார் ஓட்டுவதற்கான பயிற்சியை கொடுத்துள்ளார்.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

சிறிது தூரம் கார் சென்று கொண்டிருந்த நிலையில், சாலையின் குறுக்கே இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் வந்துள்ளனர். அதை பார்த்த சங்கீதா அதிர்ச்சியடைந்து, பிரேக் போடுவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை கொடுத்துவிட்டதாக தெரிகிறது.

[குறிப்பு: இந்த செய்தியில் மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன]

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

இதனால், தறிகெட்ட கார் சீறி பாய்ந்து இரண்டு சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதியது. அத்துடன் நிற்காமல் அருகிலிருந்து மரத்தில் மோதி அந்த கார் நின்றது இதில், அந்த இருவரும் படுகாயமடைந்தனர்.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

இதையடுத்து, அந்த வழியாக வந்தவர்களுடன் சேர்ந்து இரண்டு சிறுவர்களையும் அருகிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

இந்த சம்பவம் குறித்து சந்தோஷ்குமார் மற்றும் சங்கீதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சிறுவர்கள் அகன்ஷ் தியானி[வயது12] மற்றும் அபய் தியானி [வயது7] என்று தெரிய வந்துள்ளது.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

இருவரும் ரவிந்திர பிரசாத் தியானி என்ற மற்றொரு ராணுவ வீரரின் பிள்ளைகள் என்பதும், சந்தோஷ்குமார் வசித்து வரும் அதே குடியிருப்பு பகுதியில் ராணுவ வீரரின் மகன்கள் என்றும் தெரிய வந்தது. ரவிந்திர தியானி அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

பொதுவாக கார் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இதுபோன்று சொந்த காரில் பயிற்சி எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தே பயிற்சி பெறுவது அவசியம். ஏனெனில், பயிற்சிப் பள்ளி கார்களில் பயிற்சி பெறுவருக்கு மட்டுமின்றி, பயிற்றுனரிடத்திலும் பிரேக் பெடல் இருக்கும்.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

பயிற்சி பெறுவர் கட்டுப்பாட்டை இழந்தால் கூட, பயிற்றுனர் தன் பக்கம் உள்ள க்ளட்ச் மற்றும் பிரேக் பெடலை வைத்து காரை நிறுத்திவிடுவார். அதுமட்டுமில்லாமல், கார் ஓட்டுவதற்கான முறையான பயிற்சியும் அங்கு வழங்கப்படும்.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

குறைந்தது 10 மணி நேரமாவது பயிற்சி பெற்ற பிறகு, பழகுனர் அல்லது ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகுதான் சொந்த காரை தொட வேண்டும். பின்னர், சொந்த காரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் அல்லது மைதானங்களுக்கு சென்று முழுமையாக பயிற்சி பெற வேணடியது அவசியம்.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

நன்றாக கார் ஓட்டுகிறோம் என்ற தன்னம்பிக்கை வந்த பிறகு பொதுச் சாலைகளில் ஓட்டுவதற்கு பழக வேண்டும். அதுவும் ஓட்டுனர் உரிமம் கிடைத்த பிறகு செல்லுங்கள். குறைவான போக்குவரத்து உள்ள சாலைகளாக தேர்ந்தெடுத்து பழகுவதும் நல்லது. இதுபோன்று, சொந்த காரிலேயே பயிற்சி பெறுவது அபத்தமானது, ஆபத்து நிறைந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கார் ஓட்ட ஆசைப்பட்டு இரண்டு சிறுவர்களின் உயிரை பறித்த பெண்!

போதிய அனுபவம் பெறும் வரை மிதமான வேகத்திலேயே காரை ஓட்டுவதும் அவசியம். காரின் கட்டுப்பட்டுத்தும் ஆற்றல் வாய்த்த பிறகு சாலையை பொறுத்தும், போக்குவரத்தை பொறுத்தும் வேகத்தில் செல்ல பழகுங்கள். கார் ஓட்டும்போது சாலையிலேயே முழு கவனத்தை செலுத்துங்கள்.

Most Read Articles
English summary
Driving for the first time is always exciting and exhilarating; however, you need to keep in mind the safety of yours and others on the road.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X