கை விசிறி போல மடக்கி பையில் வைக்கக்கூடிய 'பேப்பர்' ஹெல்மெட்!

Written By:

சைக்கிள் ஓட்டிகளுக்கான விசேஷ ஹெல்மெட் மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆம், இதனை உங்கள் கைப்பையிலேயே வைத்து எடுத்துச் செல்ல முடியும்.

இந்த அசத்தலான ஹெல்மெட் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விசேஷ தயாரிப்பு

லண்டனை சேர்ந்த ஐசிஸ் ஷிஃபர் என்பவர் இந்த ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளார். இது விசேஷ காகித கூழ் கலவையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலகு எடை

இது மிக இலகு எடை கொண்டதாக இருப்பதுடன், இதனை கை விசிறி போன்று எளிதாக மடக்கி, விரிக்க முடியும் எனவே, உங்களது கைப்பையிலேயே வைத்து எடுத்துச் செல்ல முடியும்.

 

வலிமை

மேலும், தரச் சான்று பெற்ற ஹெல்மெட்டுகளுக்கு இணையான வலிமையை கொண்டதாகவும் ஐசிஸ் ஷிஃபர் தெரிவித்துள்ளார். இந்த ஹெல்மெட்டை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால், சுற்றுச்சூழலுக்கும் மிக உகந்ததாக தெரித்துள்ளார்.

அங்கீகாரம்

2016 சர்வதேச ஜேம்ஸ் டைசன் விருதையும் வென்றிருப்பதுடன், 30,000 பவுண்ட் பரிசுத் தொகையுடன் சிறந்த கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது.

தயாரிப்பு செலவு

அதுமட்டுமில்லை, இந்த ஹெல்மெட்டை உற்பத்தி செய்வதற்கான செலவு மிக குறைவு. எனவே, விலையும் குறைவாக இருக்குமாம்.

விலை மதிப்பு

அதாவது, இந்திய மதிப்பில் ஒரு ஹெல்மெட்டின் விலை ரூ.341 என்ற அளவில் விற்க முடியுமாம். அடுத்த ஆண்டு இந்த ஹெல்மெட் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐசிஸ் ஈடுபட்டுள்ளார்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
In fact, the helmet is well-engineered that it won the 2016 International James Dyson Award.
Please Wait while comments are loading...

Latest Photos