பஜாஜ் டிஸ்கவர் பைக்குடன் மோதி விபத்தில் சிக்கிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

Written By:

இந்திய சாலைகளில் அதிசக்திவாய்ந்த கார்களை இயக்குவது கடினமானதும், சவாலன காரியமே. சிறிய கவனக்குறைவும், வேகமும் விபத்துக்களுக்கு வழிகோலுங்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற மஸில் ரக கார் மாடலான ஃபோர்டு மஸ்டாங் கார் மீண்டும் ஒரு விபத்தில் சிக்கி, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சண்டிகர் நகரில் பஜாஜ் டிஸ்கவர் பைக்குடன் ஃபோர்டு மஸ்டாங் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு வாகனங்களுமே சேதமடைந்தன. பஜாஜ் டிஸ்கவர் பைக்கின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.

அதேபோன்று, மஸ்டாங் காரின் இடதுபக்க ஹெட்லைட், வீல் ஆர்ச் மற்றும் விண்ட் ஷீல்டு கண்ணாடி ஆகியவை உடைந்து நொறுங்கின. இடது பக்க பானட்டும் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் காரில் வந்தவர்களுக்கும், பைக்கில் வந்தவர்களுக்கும் என்ன ஆனது என்று தெரியவில்லை. விபத்தில் சிக்கிய மஸ்டாங் கார் தற்காலிக பதிவு எண் கொண்டதாக இருக்கிறது.

முறையான பயிற்சி இல்லாமல் ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டுவதால் இதுபோன்ற விபத்துக்கள் இந்தியாவில் தொடர்ந்து நடக்கின்றன. லம்போர்கினி கார் ஒன்றை மராட்டிய எம்எல்ஏ மனைவி ஓட்டிச் சென்று ஆட்டோரிக்ஷாவில் மோதிய சம்பவம் போல இதுவும் நடத்திருக்க வாய்ப்புண்டு.

இதுபோன்ற ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட மணிநேரம் பயிற்சி எடுத்த பிறகே காரை டெலிவிரி கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு கொண்டு வருவது அவசியமாகிறது. அதேநேரத்தில், காரை ஓட்டுபவர்களுக்கும் சாலை விதிகள் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

இந்தியாவில் விற்பனையாகும் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் ஃபோர்டு மஸ்டாங் காரும் ஒன்று. இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 401 பிஎஸ் பவரையும், 542 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்ட கார் மாடல். ரூ.65 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

2017 ஃபோர்டு மஸ்டாங் காரின் படங்கள்!

2017  ஃபோர்டு மஸ்டாங் மஸில் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Story first published: Wednesday, January 18, 2017, 17:54 [IST]
English summary
A Ford Mustang and a Bajaj Discover had a rather destructive head-on crash. The pony car Discover mashup isn't a pretty sight to see.
Please Wait while comments are loading...

Latest Photos