ஃபோர்டு மஸ்டாங் கார் வாங்கினார் முச்சத நாயகன் கருண் நாயர்

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர், தனது முச்சதத்தை குறிக்கும் வகையில் விலையுயர்ந்த ஃபோர்டு மஸ்டாங் கார் ஒன்றினை வாங்கியுள்ளார். அது குறித்த தகவலை காணலாம்.

Written By:

பெங்களூரைச் சேர்ந்த இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கருண் நாயர், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தார். இங்கிலாந்து அணிக்கெதிராக, சென்னையில் களமிறங்கிய தனது முதல் போட்டியிலேயே முச்சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். முன்னாள் நட்சத்திர வீரர் சேவாக்குக்கு பிறகு முச்சதம் கண்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையையும் பெற்றுள்ளார்.

தனக்கு புகழை தேடித்தந்த முச்சதத்தை நினைவில் கொள்ளும் வகையில், விலை உயர்ந்த அமெரிக்க மசில் காரான சிவப்பு நிற ஃபோர்டு மஸ்டாங் ஒன்றினை வாங்கியுள்ளார் கருண் நாயர்.

மஸ்டாங் காருக்கு ‘கேஏ 03 என்ஏ 303'என்ற ஃபேன்சி பதிவு எண்ணையும் வாங்கியுள்ளார் கருண் நாயர். காரின் பதிவு எண்ணுக்கும், அவரின் சாதனைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்ன தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும் கேஏ என்ற எழுத்துக்களுடனே ஆரம்பிக்கும், எனினும் எதேச்சையாக அது கருண் நாயரின் பெயருடன் ஒத்து வருகிறது. கேஏ என்பது ஆங்கிலத்தில் ‘கருண்' என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாகவும், என்ஏ என்ற எழுத்துக்கள் ‘நாயர்' என்பதின் முதல் இரண்டு எழுத்துக்களை குறிக்கும் வகையிலும் உள்ளது. இதில் 3 என்பது, அவர் களமிறங்கி முச்சதம் அடித்த 3வது இன்னிங்ஸை குறிக்கும் வகையிலும், 303 என்பது டெஸ்ட் போட்டியில் அவர் சேர்த்த 303 ரன்களையும் குறிப்பதாகவும் அமைந்துள்ளது ஆச்சரியமே.

இந்த வாரத்தில் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தான் வாங்கியுள்ள அடர்சிவப்பு நிறத்தில் கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ள மஸ்டாங் காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில், "என் காதலி" என குறிப்பிட்டு பதிவேற்றியுள்ளார்.

ஃபோர்டு மஸ்டாங் காருக்கு இந்தியாவில் மவுசு கூடி வருகிறது, பல பிரபலங்களும் இந்த காரை போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.ஏற்கெனவே நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் சமீபத்தில் இந்த காரை வாங்கியிருந்தனர் என்பதனை முன்பே குறிப்பிட்டிருந்தோம்.

இக்காருக்கு இவ்வளவு வரவேற்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணம், இதன் கவர்ச்சிகரமான தோற்றமும், அதிகபட்சமாக 396 பிஹச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட, 5.0 லிட்டர் வி8 எஞ்சினும் தான்.

பிறரை சுண்டியிழுக்கும் தோற்றம் கொண்ட மஸ்டாங் காரை இயக்கும் போது ஏற்படும் பரவசம் வார்த்தைகளில் அடங்காது. இதன் முதல் பேட்ச் கார்கள் இந்தியாவில் அறிமுகமான 15 நாட்களிலேயே விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

2017 ஃபோர்டு மஸ்டாங் காரின் பிரத்யேக படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Karun Nair, the second Indian Cricketer to score a triple century has bough himself a new Ford Mustang.
Please Wait while comments are loading...

Latest Photos