கால் இல்லாமல் கேடிஎம் பைக்கை ஓட்டும் இளைஞர்... வைரலான படங்கள்!!

கால் இல்லாமல் கேடிஎம் ஆர்சி390 பைக்கை ஓட்டும் இளைஞரை பற்றிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Written By:

ஆக்சிலரேட்டரை திருக திருக உற்சாகம் தரும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை ஓட்டுவது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். அதிலும், பலருக்கும் விருப்பமான கேடிஎம் பைக்குகள் பலரையும் ரசிகர்களாகவும், சிலரை கேடிஎம் வெறியர்களாகவும் மாற்றி இருக்கிறது.

இந்த நிலையில், வலது கால் இல்லாத இளைஞர் ஒருவர் கேடிஎம் ஆர்சி390 ஸ்போர்ட்ஸ் பைக்கை அனாயசமாக ஓட்டிச் செல்லும் படங்கள் சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சன்ஜித் பட்நாகர் என்பவர் இந்த படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வலது கால் இல்லாமல் ஒருவர் கேடிஎம் ஆர்சி390 ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டிச் செல்கிறார்.

அவரது ஊன்றுகோல்கள் கூட அந்த பைக்கின் வலது புறத்தில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த படங்கள் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. அதேபோன்று, அந்த பைக்கை வலது கால் இல்லாமல் ஓட்டிச் செல்லும் நபரின் விபரமும் தெரியவில்லை.

காரில் செல்லும்போது அந்த பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞரை படம் பிடித்து பகிர்ந்துகொண்டுள்ளார் சன்ஜித். இருந்தாலும், அந்த இளைஞர் மிக துணிச்சலாக அந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டிச் செல்கிறார்.

வலது கால் இல்லை என்பதால், பின்சக்கர பிரேக்கை பிடிக்க இயலாது. எனவே, பின்புற சக்கரத்திற்கான பிரேக்கை கையில் கட்டுப்படுத்துவது போன்று மாற்றம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இப்போது சமூக வலைதளங்களில் இந்த படங்கள் வைரலாகி உள்ளன. அவரது துணிச்சலையும், முயற்சியையும் பலரும் பாராட்டி வருவதோடு, பாதுகாப்பான பயணத்தை பெற வேண்டும் என்ற கவலையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

புதிய டாடா டிகோர் செடான் கார் படங்கள்!

அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய டாடா டிகோர் காம்பேக்ட் செடான் காரின் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are pictures of a man with one leg, riding a KTM RC. The rider sure deserves massive amounts of respect.
Please Wait while comments are loading...

Latest Photos