ஃபோர்டு கார் ஆலையில் திடீர் ஊழியராக மாறிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்!

Written By:

உலகின் பெரும்பாலான மக்களை தனது ஃபேஸ்புக்கில் கட்டிப்போட்டு வைத்திருக்கும் மார்க் ஸக்கர்பெர்க்கிற்கு திடீர் ஆசை ஒன்று எழுந்துள்ளது. மக்கள் அனைவரும் ஃபேஸ்புக்கை தாண்டி என்னென்ன செய்கிறார்கள், அவர்களது வாழ்க்கை சூழல், எதிர்கால திட்டங்கள் குறித்து நேரடியாக தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் பிறந்தது.

இதையடுத்து, கடந்த புத்தாண்டின்போது, 'Personal Year Of Travel Challenge' என்ற சவாலுடன் பயணத் திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டார். அதன்படி, அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் நேரில் பயணித்து அங்குள்ள மக்களின் வாழ்வியலை நேரடியாக கண்டு மனதில் பதிவு செய்து வருகிறார்.

அதன்படி, மிக்சிகன் மாகாணத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் விசிட் அடித்தார். அப்போது, அங்குள்ள கார் உற்பத்தி கேந்திரமாக விளங்கும் டெட்ராய்டு பகுதியில் உள்ள ஃபோர்டு கார் ஆலைக்கு சென்றார்.

அங்கு சென்றவுடன் பணியாளர்களோடு இணைந்து ஒரு ஃபோர்டு எஃப்-150 பிக்கப் டிரக்கை அசெம்பிள் செய்துள்ளார். ஆன்டென்னா பொருத்துவது, ட்ரில் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார். அந்த ஆலையில் ஒரு நாள் முழுவதும் செலவிட்டு, அங்கு நடைபெறும் கார் அசெம்பிள் பணிகளை நேரடியாக பார்த்துள்ளார்.

இதுகுறித்து பின்னர் தனது முகநூல் பக்கத்தில் சில கருத்துக்களையும், படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். கார் ஆலையில் அசெமம்பிள் செய்யும் பணி எவ்வளவு கடினமானது என்பதை நேரில் உணர முடிந்தது.

சில பணியாளர்களிடம் பேச்சு கொடுத்தேன். நாள் ஒன்றுக்கு 11 மணிநேரம் வீதம், வாரத்தில் நான்கு நாட்கள் சேர்ந்து பணிபுரிவதால் இங்குள்ள அனைவரும் ஒரு குடும்பம் போலவே இந்த பணியை செய்கிறோம் என்று கூறினர். பலர் நண்பர்களாக இருப்பதையும் கண்டு மகிழ்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார் மார்க்.

அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எவ்வளவு கடினமான பணிகளை செய்கிறார்கள் என்பதை காண முடிந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய ஃபோர்டு தலைவர் பில் ஃபோர்டுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அங்குள்ள புத்தகத்திலும் மேற்பார்வையாளராக கையெழுத்திட்டுள்ளார்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mark Zuckerberg spent time in assembling Ford F-150 pick-up trucks on the assembly line by adding antennas, cleats and drilling screws.
Please Wait while comments are loading...

Latest Photos