அவலட்சணமான தோற்றம் கொண்டதால் ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி..!

ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கி தன்னை அலட்சியப்படுத்திய ஷோரூம் பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார் முதியவர் ஒருவர். இது குறித்த தகவல்களை காணலாம்.

By Staff

அவலட்சணமான தோற்றம் கொண்டதால் விற்பனையாளர்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் ஒருவர் ரொக்கமாக பணம் செலுத்தி ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

செல்லும் இடத்திற்கு தகுந்த உடை, தோற்றம் இருக்க வேண்டும் என்பார்கள்.. அப்படி இல்லாமல் செல்பவர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்படுவார்கள் என்பது அனுபவித்தவர்களுக்கே புரியும்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

ஆனால், ஒரு மனிதனை தோற்றத்தை வைத்து மட்டுமே மதிப்பது என்பது எப்போதும் தவறான ஒன்றாகும்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

தோற்றத்தை மட்டுமே வைத்து மதிப்பிடுவது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதனை சமீபத்திய இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த லங் டேச்சா (Lung Decha) என்ற முதியவர் ஒருவர் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க ஆசைப்பட்டுள்ளார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

இதற்காக ஹார்லி பைக் ஷோரூமுக்கு சென்ற லங் டேச்சா ஆளுக்கு சற்றும் பொருந்தாத பெரிய நைந்துபோன டி-சர்ட், கிழிசலான அழுக்கு பேண்ட், சாதாரண செருப்புகள், சரியாக சீவப்படாத நீண்ட முடி என அவலட்சணமான தோற்றத்தில் சென்றுள்ளார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

ஹார்லி டேவிட்சன் என்பது மிகவும் விலை மதிப்பு வாய்ந்த ஒரு பிராண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பைக்குகளின் ஆரம்ப விலையே சில லட்சங்களாக உள்ளது.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய இந்த பைக்கை, அவலட்சணமான இந்த முதியவரா வாங்கிவிட போகிறார் என்று ஷோரூம் ஊழியர்கள் இவரை அலட்சியப்படுத்தியுள்ளனர்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

அது மட்டுமல்லாமல் பார்க்கவே மிகவும் ஏழ்மையாகவும், அவலட்சணமாகவும் இருந்ததால் ஷோரூம் விற்பனை பிரதிநிதிகள் இந்த முதியவரை மனிதராகக் கூட மதிக்காமல் புறக்கணித்துள்ளனர்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

ஷோரூம்களில் மதிப்பு கொடுக்காததால் இவரும் மணம் தளராமல் ஒவ்வொரு ஷோரூமாக சென்றுள்ளார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

இறுதியில் ஒரு ஷோரூமில் விற்பனை பிரதிநிதிகள் இவரின் தோற்றத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இதர வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துடன் உபசரித்துள்ளனர்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

தான் வாங்க விரும்பிய ஹார்லி டேவிட்சன் பைக் மாடலை தேர்ந்தெடுத்து அதன் முகப்பு முதல் அடி வரையிலும் பார்த்து சோதித்துள்ளார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

அதிகம் இல்லை, வெறும் 10 நிமிடங்களில் தான் விரும்பிய விலையுயர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை இவர் வாங்கிவிட்டார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

பைக் வாங்கிய முதியவரைக் கண்டு க்ஷோரூம் ஊழியர்கள் உண்மையில் ஆச்சரியத்தில் திளைத்தே போய்விட்டனர்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

ஏனெனில், ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கான தொகையை முழுவதும் ரொக்கமாகவே இவர் செலுத்தியுள்ளார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

பார்ப்பதற்கு சாப்பிட கூட வழியில்லாதவரைப் போல தோற்றம் கொண்ட இந்த அழுக்கு உடை அணிந்த முதியவர் முழு தொகையையும் ரொக்கமாக செலுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

இவர் வாங்கிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை தாய்லாந்து நாட்டு மதிப்பில் 7,53,000 தாய் பாத்கள் ஆகும்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 10 லட்ச ரூபாய் என்பது உண்மையில் வியக்க வைக்கிறது. (17,000 அமெரிக்க டாலர்கள்)

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

இவர் ஒரு முன்னாள் மெக்கானிக். ஓய்வுகாலத்தில் தான் இதுவரையிலும் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு தன் கணவு வாகனமான ஹார்லி டேவிட்சன் பைக்கை இந்த முதியவர் வாங்கியுள்ளார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

முதியவரான லங் டேச்சா, ஷோரூமில் பைக்கை பரிசோதிப்பது, பைக் மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

தோற்றத்தை கொண்டு ஒருவரை மதிப்பிடுவது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதற்கு சான்றாக சமூக வலைத்தளங்களில் முன்னுதாரமாக தற்போது லங் டேச்சா மாறியுள்ளார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

லங் டேச்சா ஹார்லி பைக்கை வாங்கும் முன்பு பல ஷோரூம்களிலும் அவர் மனிதராக கூட மதிக்கப்படவில்லையாம்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

அந்த ஷோரூம் ஊழியர்கள் புறத் தோற்றத்திற்கு மதிப்பு கொடுத்து, சக மனிதராக இவரை மதிக்காததால் ஏற்பட்ட இழப்பை இந்நேரம் அந்த ஷோரூம் ஊழியர்களும் உணர்ந்திருப்பர்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

உள்ளூர் நாயகனாக தற்போது உருவெடுத்துள்ள லங் டேச்சா ஒரு நேர்மையான மனிதர் என்று அவரின் மூத்த சகோதரி பெருமிதத்துடன் அவரைப் பற்றி குறிப்பிட்டார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

இதுவரையில் தான் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை கொண்டு தன்னுடைய லட்சியத்தை அவர் நிறைவேற்றியுள்ளார் என்றும் அவரின் சகோதரி மேலும் குறிப்பிட்டார்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

அந்த ஷோரூம் ஊழியர்கள் போல் தான் பலரும் நம் மத்தியிலும் உள்ளனர். லங் டேச்சா போல் இங்கு பலரும் வாழ்ந்து வருகின்றனர்.

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

இதன் மூலம் நாம் இரண்டு பாடத்தை கற்றுக்கொள்ள முடிகிறது. "ஒன்று: தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக் கூடாது"

ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஹார்லி பைக் வாங்கி பதிலடி!

"இரண்டு: லட்சியத்தை மனதில் வைத்துக்கொண்டு அதற்காக கடினமாக உழைத்து காசு சேமிக்க வேண்டும்". அடுத்து ஒருவர் சேமித்த பணத்தை எவ்வாறு செலவழிக்கிறார் பாருங்கள்

டர்பன் கலருக்கு ஏற்றாற்போல் கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் சீக்கியர்!

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

'சிங் இஸ் கிங்' என்ற ஒரு சொல்லாடல் இந்தியாவில் மிக பிரபலம். திரைப்படங்கள் மற்றும் கதைகளில் வரும் சீக்கிய கதாபாத்திரத்திரங்களுக்கு இப்படியொரு வடிவம் எப்படியாவது கொடுக்கப்பட்டு விடும்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரூபன் சிங் என்ற சீக்கியர், இங்கிலாந்தில் ஒரு நிஜ 'சிங் இஸ் கிங்'காகவே வாழ்ந்து வருகிறார். கார் காதலரான இவர், ட்விட்டரில் பக்கத்தில் புதிய வைரலை ஏற்படுத்தியுள்ளார். அதைப்பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் ரூபேன் சிங். முன்னதாக, 90-களில் இங்கிலாந்தை கலக்கிய 'மிஸ் ஏட்டிட்யூடு' என்ற ஆடை விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்தார்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

பல பெண்கள் விரும்பும் பிராண்டாக 'மிஸ் ஏட்டிட்யூடு' இருந்து வந்தது. அப்போது கோடிகளில் புரண்ட ரூபேன் சிங்கை ‘பிரிட்டிஷ் பில் கேட்ஸ்' என்று இங்கிலாந்தின் வணிக பிரிவு ஊடகங்கள் புகழ்ந்தன.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

2007ம் ஆண்டில் தனது ஆடை தயாரிப்பு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக. அந்நிறுவனத்தை ரூபேன் சிங் விற்றுவிட்டார்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

இனி இவர்அவ்வளவு தான் என பல பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து, தற்போது அதற்கு சி.இ.ஓ-வாக உயர்ந்துள்ளார் ரூபேன் சிங்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தாலும் மனதாலும், செயலாலும் இந்திய கலாச்சாரங்களை பின்பற்றி வருபவர் தான் இந்த ரூபேன் சிங். சீக்கிய மதத்தை பின்பற்றும் இவர் டர்பன் கட்டுவதை வழக்கமாக்கி கொண்டவர். இதைப்ப்பார்த்த ஒரு ட்விட்டர் வாசி டர்பனை 'பேன்டேஜ்' என்று கூற வெடித்தது கோபம்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

இங்கிலாந்தை சேர்ந்த அந்த ட்விட்டர் வாசிக்கு தக்க பதிலடி கொடுக்க நினைத்த ரூபேன் சிங், தலையில் கட்டும் டர்பனின் நிறத்திற்கு பொருத்தமான தோற்றம் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன் புகைப்படம் எடுத்து பதிவிடுவதாக சவால் விட்டார். அதுவும் ஒரு வாரம் முழுக்க செய்வேன் என அவர் கூறினார்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

மஞ்சள் நிறம் தொடங்கி, அடர் பிரவுன், வெள்ளை, சிவப்பு, இலகுவான சாம்பல் நிறம் என பல வண்ணங்களில் டர்பன் கட்டி, அதற்கு மேட்சிங்காக ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன் நின்று புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட தொடங்கினார் ரூபேன் சிங்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

இவரது இந்த பதிவுகள் பலரால் ரீ-ட்விட் செய்யப்பட்டன. குறிப்பாக இந்தியர்கள் ரூபேன் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் - டர்பன் மேட்சிங் பந்தயத்திற்கு பரவலாக ஆதரவு தெரிவித்தனர். ட்விட்டர் முழுக்க இது வைரலாக தொடங்கியது.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருப்பது பெருமையான மற்றும் ஆடம்பர அடையாளம். இது இந்தியாவிலும் அப்படித்தான், உலகளவில் பல நாடுகளிலும் இதே நிலை தான்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நம்ம ஊர் ஸ்டார் விஜய் என பல நட்சத்திரங்கள் தலா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை அவரவர் வசம் சொந்தமாக வைத்துள்ளனர்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பணக்காரர்கள் மற்றும் பிரபலங்களிடம் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் இல்லை.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

நிதர்சனம் இப்படியிருக்க, இங்கிலாந்தில் வாழும் இந்த இந்தியர், டர்பனுக்கு நிறத்திற்கு பொருத்தமான வண்ணங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் எதையும் ரூபேன் சிங் வாடகையாக வாங்கவில்லை என்பது தான் இங்கே பெரிய ஆச்சர்யம்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

ஆம், ட்விட்டரில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலர் கலர் ரோல்ஸ் ராய்ஸ் மாடல்கள் எல்லாமே ரூபேன் சிங்கின் சொந்த கார்கள். மொத்தம் ஏழு நாட்கள், ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

இந்தியாவில் இல்லாமல், இங்கிலாந்தில் ஒரு இந்தியர் ஏழு வேவ்வேறு நிறங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பது பல கார் ஆர்வலர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்!

ரூபேன் சிங் தொடங்கி வைத்த இந்த டிரென்டை பல வலைதள வாசிகள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். கார் வித் பிக் என்ற பெயரில் ட்விட்டரில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் இணையத்தில் டிரென்டிக்கின்றன.

Most Read Articles
English summary
Read in Tamil about Shabby dressed old man disrespected at showroom buys costly harley davidson bike in cash payment.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X