கார்களின் வாடையே இல்லாத வியக்க வைக்கும் 'பசுமை' நகரங்கள்!

வாகன நெருக்கடியில் மூச்சுத் திணறி வரும் நகரங்களில், கார்களை பார்த்து பார்த்து டென்ஷனாகி நிற்பவரா நீங்கள்? வாகன புழக்கமே இல்லாத ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்று மனது துடிக்கிறதா? இன்றைய நவீன உலகின் இன்றியமையாத போக்குவரத்து சாதனமான கார்களின் வாடையே இல்லாத நகரங்களை நினைத்து பார்க்க முடியவில்லைதானே!

ஆனால், அதுபோன்ற நகரங்கள் உலகினில் பல இருக்கின்றன என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த செய்திதக்தொகுப்பு. வாருங்கள், கார் வாடையே இல்லாத அந்த நகரங்களுக்கும், அல்லது கார்களின் பயன்பாட்டை குறைக்க தீவிரமாக களமிறங்கியிருக்கும் ஊர்களுக்கும் ஒரு விசிட் அடிக்கலாம்.

14.சார்க் தீவு

14.சார்க் தீவு

ஆங்கில கால்வாயில் அமைந்திருக்கும் ஓர் அழகிய தீவு நகரம்தான் சார்க். கார்கள் முழுமையாக தடை செய்யப்பட்ட இடம் இந்த தீவு. குறுகலான சாலைகளை கொண்ட தீவு என்பதுடன், 65 கிமீ தூரத்திற்கான கடற்கரையை கொண்டிருக்கும் இந்த தீவில் குதிரை வண்டிகளும், மிதி வண்டிகளும் மட்டுமே பயன்படுத்த முடியும். முதியவர்களுக்காக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. படகுகள் மூலமாக மட்டுமே இங்கு சென்று வர முடியும். வாகன இறைச்சலும், புகையும் இல்லாத நகரங்களுக்கு செல்ல விரும்புவோர் இந்த தீவுக்கு ஓர் விசிவாகனப் புகை மாசு, இறைச்சலில்லாத தீவாக இதனை கூறலாம்.

கொசுறுத் தகவல்:

படத்தை உற்றுநோக்கினால், இந்த பாதையில் பக்கவாட்டில் இருக்கும் தடுப்புகள் 1900ம் ஆண்டு அமைக்கப்பட்டது.அதற்கு முன்னர் இந்த பாதையில் செல்லும் சிறுவர்கள் காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு கீழே விழுந்ததையடுத்து, அந்த தடுப்புகள் அமைக்கப்பட்டதாம்.

13.மேட்ரிட்

13.மேட்ரிட்

ஸ்பெயின் நாட்டு தலைநகரான மேட்ரிட் நகரம் வாகன பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த நகரிலுள்ள பல்வேறு சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. கார் இல்லா பகுதியை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. வீட்டிலிருந்து ஒரு சதுர மைல் தூரத்திற்கு மட்டுமே காரை இயக்க முடியும். அதற்கு மேல் செல்பவர்களுக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய மேட்ரிட் நகரம் முழுவதும் வாகன இயக்கம் இல்லாத பகுதியாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரின் பரபரப்பு மிகுந்த 24 முக்கிய சாலைகள் நடைபாதைகளாக மாற்றப்பட உள்ளன. மேலும், அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு பார்க்கிங் செய்வதற்கான கட்டணங்களை கணிசமாக உயர்த்தவும் மேட்ரிட் நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

12.பாரிஸ்

12.பாரிஸ்

ஸ்பெயின் நாட்டு தலைநகரான மேட்ரிட் நகரம் வாகன பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த நகரிலுள்ள பல்வேறு சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. கார் இல்லா பகுதியை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. வீட்டிலிருந்து ஒரு சதுர மைல் தூரத்திற்கு மட்டுமே காரை இயக்க முடியும். அதற்கு மேல் செல்பவர்களுக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய மேட்ரிட் நகரம் முழுவதும் வாகன இயக்கம் இல்லாத பகுதியாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரின் பரபரப்பு மிகுந்த 24 முக்கிய சாலைகள் நடைபாதைகளாக மாற்றப்பட உள்ளன. மேலும், அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு பார்க்கிங் செய்வதற்கான கட்டணங்களை கணிசமாக உயர்த்தவும் மேட்ரிட் நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நகரின் சிறப்பு: பேஷன், ஷாப்பிங், ஒயின் ஆகியவை பாரிஸ் நகரத்தின் ஈர்ப்புகளுக்கு காரணமானவை.

11.செங்குடு

11.செங்குடு

கார் பயன்பாட்டை அறவே இல்லாத நகரமாக மாற்றும் திட்டங்களுடன் களமிறங்கியிருக்கும் தென்மேற்கு சீன நகரம்தான் செங்குடு. இந்த நகரத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் மாதிரி சேட்டிலைட் நகரத்தின் வடிவமைப்பின்படி, இந்த நகரத்தின் எந்தவொரு பகுதியையும் 15 நிமிட நடைபயணத்தில் அடைந்துவிட முடியும். இந்த நகரத்தை சிகாகோ நகரத்தை சேர்ந்த கட்டிட கலை வல்லுனர்கள் அட்ரியன் ஸ்மித் மற்றும் கார்டன் கில் ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இந்த நகரத்தில் பாதி அளவு பகுதிகளில் மட்டுமே வாகனங்களை இயக்க முடியும். 2020ம் ஆண்டில் இந்த நவீன மாதிரி நகரம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகரின் சிறப்பு: பான்டா கரடிகளின் தாயகம்.

10.ஹம்பர்க்

10.ஹம்பர்க்

ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான ஹம்பர்க் நகரில் கார்களை தடைசெய்வதற்கு பதிலாக, நடைபாதை அல்லது சைக்கிளில் எளிதாக அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில், புதிய தடங்களை அமைக்க ஹம்பர்க் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. நகரின் 40 சதவீத பகுதிகள் இந்த பிரத்யேக நடைபாதை மற்றும் சைக்கிள் தடங்கள் மூலம் இணைக்கப்படும்.

நகரின் சிறப்பு: ஐரோப்பாவிலேயே அதிக மில்லியனர்களை கொண்ட நகரம்.

09.ஹெல்சின்கி

09.ஹெல்சின்கி

பின்லாந்து நாட்டின் தலைநகரமான ஹெல்சின்கி நகரம் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் விழி பிதுங்கி வருகிறது. கார் பயன்பாட்டை குறைத்து பொது போக்குவரத்து மக்கள் பயன்படுத்தும் விதத்தில் விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. மேலும், புதிய மொபைல் அப்ளிகேஷன் மூலமாக பைக், கார் மர்ரும் டாக்சி ஷேரிங் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் கார் பயன்பாடு அவசியமில்லாத நிலை இந்த நகரத்தில் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நகரின் சிறப்பு: ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகம்.

08.மிலன்

08.மிலன்

இத்தாலியிலுள்ள மிலன் நகர நிர்வாகம் கார் பயன்பாட்டை குறைக்க புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, காரை வீட்டிலேயே விட்டு செல்பவர்களுக்கு பொது போக்குவரத்தில் செல்வதற்கான கட்டணத்துக்கான வவுச்சர்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக, காரின் டேஷ்போர்டில் ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்டிருப்பதால், காரின் நகர்வை எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஏமாற்றுவதற்கான வழியில்லை.

நகரின் சிறப்பு: இத்தாலியின் வர்த்தக நகரம். 12,000 நிறுவனங்கள், 800 ஷோரூம்கள், 600 விற்பனை மையங்கள் உள்ளன. உலகின் 12வது காஸ்ட்லியான நகரம்.

07.கோபன்ஹேகன்

07.கோபன்ஹேகன்

டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகன் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே வாகன போக்குவரத்தால் அவதியுற்றது. இதையடுத்து, அங்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலமாக கார் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது 250 கிமீ தூரத்துக்கான மிதிவண்டி தடங்கள் அங்கு இருக்கின்றன. குறைவான கார் உரிமையாளர்கள் கொண்ட ஐரோப்பிய நகரங்களில் கோபன்ஹேகனும் ஒன்று.

நகரின் சிறப்பு: உலகின் மகிழ்ச்சியான நகரமாம். 55 சதவீதத்தினர் மிதிவண்டியில் அலுவலகம் செல்கின்றனர்.

06.மேக்கினாக் தீவு, மிச்

06.மேக்கினாக் தீவு, மிச்

வெறும் 600 பேர் மட்டுமே வசிக்கும் இந்த 3.8 சதுர மைல் பரப்பளவு கொண்ட தீவில் 1898ம் ஆண்டே மோட்டாரகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது வரை குதிரை வண்டிகள் மூலமாக இங்கு போக்குவரத்து நடக்கிறது.

நகரின் சிறப்பு: குளிர்காலத்தில் உறைநிலைக்கு கீழே வெப்ப நிலை செல்வதால், இங்கு மக்கள் வசிக்க இயலாது. கோடை காலத்தில் மட்டும் 15,000 பேர் வந்து வசிக்கின்றனர்.

05.மெடினா ஆஃப் பெஸ் அல் பாலி, மொராக்கோ

05.மெடினா ஆஃப் பெஸ் அல் பாலி, மொராக்கோ

இந்த நகரில் 1.56 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலகிலேயே கார் பயன்பாடு அறவே இல்லாத அதிக மக்கள் தொகை உடைய நகரமாக இதனை குறிப்பிடலாம். இந்த நகரின் சாலைகள் குறுகலாக அமைக்கப்பட்டிருப்பதே மோட்டார் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு செய்துள்ளது. சில சாலைகள் 2 அடி அகலம் மட்டுமே உடையது. எனவே, மிதி வண்டியில் செல்வதே கடினமாக இருக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.

நகரின் சிறப்பு: உலக புராதான நகரம்

04.ஹைத்ரா, சரோனிக் தீவுகள், க்ரீஸ்

04.ஹைத்ரா, சரோனிக் தீவுகள், க்ரீஸ்

இந்த தீவின் நீர் நிலைகளில் கட்டுமரங்களும், நிலத்தில் குதிரை வண்டிகளும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

03.லா கம்பிரெசிட்டா, அர்ஜென்டினா

03.லா கம்பிரெசிட்டா, அர்ஜென்டினா

இந்த சிறிய நகரத்தில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பரப்பளவு கொண்ட இந்த பகுதிக்கு வெளியில் இருக்கும் பார்க்கிங் பகுதியில் வண்டிகளை நிறுத்திவிட்டு நடந்துதான் இந்த நகரத்திற்கு சென்று வர முடியும்.

02.லமு தீவு, கென்யா

02.லமு தீவு, கென்யா

சுற்றுலா பகுதியான இந்த தீவு உலக புராதான பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த தீவிலும் வாகனங்களுக்கு அனுமதியில்லை. கழுதைகள்தான் போக்குவரத்து சாதனம். இதற்காக, இந்த தீவில் 3,000 கழுதைகள் உள்ளன.

நகரின் சிறப்பு: அரேபிய வர்த்தகர்களால் 14ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட நகரம். ஆப்ரிக்காவின் பழமையான இந்த நகரம் கட்டிட கலைக்கு பெயர் பெற்றது.

01.வெனிஸ், இத்தாலி

01.வெனிஸ், இத்தாலி

ஹனிமூன் செல்லும் தம்பதிகளின் முதல் சாய்ஸ். வெனிஸ் நகரின் நில அமைப்பு மோட்டார் வாகனங்களுக்கான பயன்பாடு அற்றதாக மாறிவிட்டது. இந்த நகரில் படகு போக்குவரத்து அல்லது நடராஜா வண்டியில்தான் செல்ல முடியும். ஐரோப்பாவின் கார் இல்லாத நகரமாக இதனை கூறலாம்.

'பசுமை' இந்தியா???

'பசுமை' இந்தியா???

நம் நாட்டில் கார் பயன்பாடு அறவே அற்றதாக மாற்றுவது கடினம். ஆனாலும், கார் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இப்போதே திட்டங்களை துவங்கினால் கூட இன்னும் குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் பிடிக்கும். அரசாங்கம் விதிமுறைகளை அமல்படுத்தினாலும், அதனை பின்பற்றும் மனோபாவமும், மக்களிடம் மனமாற்றங்கள் ஏற்படுவதும் அவசியம். எனவே, பசுமை நகரங்கள் என்பது நம் நாட்டுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Fed up of pollution? Wondering where to go on your next vacation? Why don't you try one of these car-free cities, and let us know your experience.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X