ரயில் தடம்புரண்டு விபத்து: பெட்டிகளில் இருந்த பிஎம்டபிள்யூ கார்கள் நசுங்கி சேதம்!

Written By:

அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ கார்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் பலத்த சேதமடைந்தன.

அமெரிக்காவிலுள்ள ஆலையிலிருந்து ஏற்றுமதிக்காக அந்த கார்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு எஞ்சின்கள் மற்றும் 12 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருந்த அந்த ரயிலில் நூற்றுக்கணக்கான பிஎம்டபிள்யூ கார்கள் வைத்து எடுத்துச் செல்லப்பட்டன.

 

 

தெற்கு கரோலினாவில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையிலிருந்து கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக அந்த கார்கள் சார்லெஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தெற்கு கரோலினா அருகில் உள்ள ஜென்கின்ஸ்வில்லே பகுதியில் அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 120 பிஎம்டபிள்யூ கார்கள் பலத்த சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயிலை இயக்கிய இரண்டு ஓட்டுனர்களும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் இரண்டு எஞ்சின்களும், 4 ரயில் பெட்டிகளும் எளிதாக மீட்கப்பட்டு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. மீதமுளள 8 ரயில் பெட்டிகளும் பலத்த சேதமடைந்தன. அதிலிருந்து 120 பிஎம்டபிள்யூ கார்களும் பலத்த சேதமடைந்தன.

சின்னாபின்னமாகி கிடந்த ரயில் பெட்டிகளையும், பிஎம்டபிள்யூ கார்களையும் பொக்லின் எந்திரங்கள் மூலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து, பல மணிநேரம் கழித்து அந்த ரயில் பாதையில் போக்குவரத்து சீரடைந்தது.

இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வருவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களை சரிசெய்து மீண்டும் அனுப்பப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை. மிக மோசமாக சேதமடைந்த கார்களை கைவிடுவதுதான் வழியாக கருதப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The train was carrying 120 BMW SUVs which were to be exported out of the US to go on sale in other international markets.
Please Wait while comments are loading...

Latest Photos