புதிய 2000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காரின் பின்னணி இதுதான்!

காதலியைக் கவர புதிய 2000 ரூபாய் நோட்டுகளால் காரை அலங்கரித்து சாலையில் ஓட்டிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டது திரிக்கப்பட்ட செய்தி. உண்மையில் நடந்தது தான் என்ன?

Written By:

கடந்த சென்ற காதலர் தினத்தன்று, இளைஞர் ஒருவர் தனது காதலியை கவர தன் ஹோண்டா சிட்டி கார் முழுக்க 2000 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரித்து அதனை சாலையில் ஓட்டிச் சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது நினைவிருக்கலாம்.

இந்த சம்பவம் சமுக ஊடகங்கள் வாயிலாக கடந்த இருதினங்களாக நாட்டையே கலக்கி வருகிறது, இந்த இளைஞர் செய்த காரியத்தை கண்டு நமது பிரதமர் மோடி, மீண்டும் புதிய 2000 ரூபாயைக்கூட பணமதிப்பிழப்பு செய்துவிடுவார் என்று அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளும் பரப்பப்பட்டன. உண்மை நிலவரம் என்ன என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

நடந்தது தான் என்ன?

உண்மையில் அது காதலியை கவர, காதலன் செய்த செயல் அல்ல என்பது தற்போது தெரியவந்திருக்கிறது, தானே ஓட்டிச் செல்லும் வகையிலான கார்களை வாடகைக்கு விடும் நிறுவனமான ‘ஜூம் கார்', தனது விளம்பரத்திற்காக செய்த செயல் தான் அது. உண்மையில் அது ரூபாய் நோட்டுக்களே அல்ல, வெறும் ஸ்டிக்கர் மட்டுமே.

ஜூம் கார் நிறுவனம் டெல்லி, புனே, ஹைதராபாத் மற்றும் மும்பை என 4 நகரங்களில் இது போன்று விளம்பரத்திற்காக, ரூபாய் நோட்டுகள் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிய கார்களை உலவ விட்டிருக்கின்றது, அக்காருடன் செல்ஃபி எடுப்போர்க்கு அதிர்ஷ்டக் குலுக்கல் அடிப்படையில் வெற்றி பெறுவோர்க்கு விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் காரில் 12 மணி நேரப் பயணம் இலவசமாக அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.

நிலவரம் இப்படியிருக்க, மும்பை நகரில் அந்த காரை போலீசார் தடுத்த நிறுத்திய அதன் ஓட்டுநரை கைது செய்த போது நிலைமையை வேறு மாதிரியாக திரித்து, சமூக ஊடகங்களில் செய்தியாக உலவ விட்டுள்ளனர் என்பதே நிதர்சனம்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
A Honda City was impounded after being wrapped in Rs 2000 notes on Valentine’s Day. Here’s the actual truth behind the car.
Please Wait while comments are loading...

Latest Photos