இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஆடி நிறுவனம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளது ஆடி நிறுவனம். இது குறித்து விரிவாக காணலாம்.

Written By:

மைதானத்தில் அதிரடியை காட்டி அசரடித்து வரும் இந்தியாவின் நட்சத்திரக் கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லி ஒரு கார் பிரியர் என்பது நாம் அனைவருக் அறிந்ததே.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் என்று பொறுப்புகள் மிகுந்த கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லிக்கு ஆடி கார்கள் என்றால் கொள்ளை பிரியம் என்பதும் நாம் தெரிந்ததே.

கோஹ்லியிடம் ஆடி நிறுவனத்தின் அதிவேகமான ஸ்போர்ட்ஸ் காரான ஆர்8 முதல் ஆர்8 எல்எம்எக்ஸ், ஏ8எல் செடன், க்யூ7 உள்ளிட்ட கார்கள் ஏற்கெனவே இருக்கின்றன.

ஆடி இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் கோஹ்லி செயல்பட்டு வருகிறார்.

தற்போது வெள்ளை நிற மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி க்யூ7 காரை நமது விராட் கோஹ்லிக்கு பரிசாக அளித்துள்ளது ஆடி நிறுவனம்.

ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரஹில் அன்சாரி புதிய ஆடி க்யூ7 45 டிடிஐ காரின் சாவியை விராட் கோஹ்லியிடம் நேரில் கொடுத்துள்ளார்.

சிறந்த டிசைன், கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டது ஆடி கார்கள். இளைஞர்களை குறி வைத்து செயல்பட்டு வரும் ஆடி நிறுவனம்.

இளைஞர்களின் முன்மாதிரியாக விளங்கி வரும் விராட் கோஹ்லியை தனது பிராண்டின் தூதராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட க்யூ7 கார் இந்தியாவில் சமீபத்தில் தான் விற்பனைக்கு அறிமுகமானது.

இவை குறைந்த எடை கொண்டதாகவும், ஸ்போர்டி டிசைனிலும், அதிக பவர் கொண்ட சொகுசுக் காராகவும் விளங்குகிறது.

கோஹ்லியின் ஆட்டத்திற்கு ரசிகர்கள் அடிமையாகி உள்ள நிலையில் அவர் ஆடி கார்களின் ரசிகராக உள்ளார். தற்போது புதிய க்யூ7 கார் கிடைத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு பரிசாக கிடைத்த ஆடி க்யூ7 காரை டெல்லியில் உள்ள புத் சர்ச்க்யூட் ஃபார்முலா-1 பந்தயத்திடலில் ஓட்டி மகிழ்ச்சியடைந்தார் விராட். அவருடன் சக வீரரான லோகேஷ் ராகுலும் இணைந்து கொண்டார்.

ஆடி க்யூ7 45 காரில் 3.0 லிட்டர் டிடிஐ டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 248 பிஹச்பி ஆற்றலையும், 600 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

கடந்த ஆண்டு இதே மாடலில் பெட்ரோல் இஞ்சினை ஆடி நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 252 பிஹ்சபி ஆற்றலையும், 370 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

இரண்டு இஞ்சின்களுமே 8 ஸ்பீடு டிப்ட்ரோனிக் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்டதாக உள்ளது. இஞ்சினின் பவரை ஆடியின் க்வாட்ரோ ஏடபிள்யூடி சிஸ்டம் நான்கு வீல்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறது.

புதிய ஆடி க்யூ7 காரில் எண்ணற்ற சிறப்பு அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. இதில் மேட்ரிக்ஸ் எல்ஈடி முகப்பு விளக்குகள், சிங்கில் ஃபிரேம் கிரில், எல்ஈடி பின்விளக்குகள் மற்றும் 20 இஞ்ச் அலாய் வீல்களும் உள்ளன.

இதில் டச் ஸ்கிரீன் கொண்ட ஆடியின் பிரத்யேக எம்எம்ஐ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், யூஎஸ்பி போர்டுகள், புளூடூத் வசதியுடன் கூடிய ஆடி மியூசிக் சிஸ்டம் தரப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக இந்த எஸ்யூவியில் 12.3 இஞ்ச் கொண்ட ஆடியின் பிரத்யேக விர்ச்சுவல் காக்பிட் ஸ்கிரீனும் தரப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி பரிசாக பெற்றுள்ள புதிய ஆடி க்யூ3 காரின் விலை ரூ.80.95 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இது லிட்டருக்கு 14.75 கிமீ மைலேஜ் தரும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Virat kohli gifted a new audiq7 by audi india.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK