க்ரேடோஸ் பிராண்டின் கீழ் பஜாஜ் ஆட்டோவின் விஎஸ்400 பைக் அறிமுகமாகும்

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், க்ரேடோஸ் (Kratos) என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளனர். சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் புகழ்பெற்ற பிராண்ட், பழையதாக ஆகிவிட்டாலோ அல்லது தங்களின் பிராண்ட்களுக்கு புதிய உத்வேகம் அளிக்க நினைத்தாலோ, பிராண்ட்களின் பெயரை மாற்றுவது வழக்கம். பஜாஜ் ஆட்டோ நிறுவனமும், க்ரேடோஸ் என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் க்ரேடோஸ் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

பல்சர்;

பல்சர்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பிராண்ட், இந்நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற பிரான்ட்களில் ஒன்றாக உள்ளது. இந்த பிராண்டின் கீழ் ஏராளமான பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது. அவற்றில் பெரும்பாலான மாடல்கள் ஹிட்டான மாடல்களாக விளங்குகின்றன. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பல்சர் பிராண்ட், நீடித்து வந்துள்ளது.

க்ரேடோஸ்;

க்ரேடோஸ்;

தற்போது, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், க்ரேடோஸ் என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. க்ரேடோஸ் (Kratos) என்பது கிரேக்க போர் கடவுள் (Greek God of war) பெயர் ஆகும். இந்த பெயர், பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பொருத்தமானதாக இருக்கிறது.

பெயர் மாற்றம்;

பெயர் மாற்றம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்சர் பிராண்டின் கீழ் பல்சர் சிஎஸ்400 பைக்கை முதன் முதலாக, 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தினர். அப்போது முதல், இது, இந்நிறுவனத்தின் புகழ்மிக்க மாடலாக விளங்குகிறது. ஆனால், தற்போது பிராண்ட் மாற்றத்துடன், இந்த சிஎஸ்400 பைக், விஎஸ்400 என்றும் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இனிமேல், இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், பஜாஜ் க்ரேடோஸ் விஎஸ்400 பைக் என்றே அழைக்கப்படும். இதில், விஎஸ் என்பது வான்டேஜ் ஸ்போர்ட்ஸ் என்பதை குறிக்கிறது.

காரணம்;

காரணம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் போட்டி போடும் நோக்கில், இந்த க்ரேடோஸ் பிராண்டின் கீழ் உயர்ந்த டிஸ்பிளேஸ்மன்ட் உடைய பைக்கினை தயாரிக்க உள்ளது. ராஜீவ் பஜாஜ் கூறியபடி, 150சிசி-க்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட பஜாஜ் குரூஸர் பைக்குகள், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மாடல்களுடன் போட்டி போட தகுந்த மாடல்களாக இருக்கும். இதனாலேயும், இந்த பல்சர் பிராண்ட் பெயர் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டைல்;

ஸ்டைல்;

ஸ்டைல் பொருத்த வரை, கான்செப்ட் நிலையில் இருந்த பஜாஜ் ஆட்டோவின் பல்சர் சிஎஸ்400 மாடலுக்கும், விரைவில் வெளியாக உள்ள பஜாஜ் க்ரேடோஸ் விஎஸ்400 பைக்கிற்கும் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லை. வழக்கமான ஃபோர்க்குகளுக்கு பதிலாக, புதிய மாடலில் தலைகீழாக இருக்கும் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் க்ரேடோஸ் விஎஸ்400 பைக்கிற்கு, கேடிஎம் டியூக் மாடலில் இருந்து பெறப்பட்ட சிங்கிள் சிலிண்டர் உடைய 373 சிசி, லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 34.5 பிஹெச்பியை வெளிப்படுத்தும் இந்த இஞ்ஜின் குரூஸிங் திறன்களை மேம்படுத்தும் வகையில், லேசாக மாற்றி டியூன் செய்யப்படுகிறது.

முக்கிய அம்சம்;

முக்கிய அம்சம்;

பஜாஜ் க்ரேடோஸ் விஎஸ்400 பைக், இதன் செக்மென்ட்டில் மிக முக்கியமான அம்சமான ஏபிஎஸ் எனப்படும் டியூவல் சேனல் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வெளியாகும். இந்த டியூவல் சேனல் ஏபிஎஸ் வசதி, தேர்வு முறையில் வழங்கப்படும்.

அறிமுகம்;

அறிமுகம்;

பஜாஜ் க்ரேடோஸ் விஎஸ்400 பைக்,, இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது.

விலை;

விலை;

பஜாஜ் க்ரேடோஸ் விஎஸ்400 பைக், 1.6 லட்சம் ரூபாய் முதல் 1.7 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் அறிமுக தேதி அறிவிப்பு - முழு விவரம்

Most Read Articles
English summary
Bajaj Auto gets a New Brand called Kratos. The name Kratos stands for Greek God of war. After almost over a decade of creation of Pulsar brand, Bajaj has broken Pulsar boundary and created brand called Kratos. Bajaj created this new brand called Kratos to launch its all-new VS 400 motorcycle. This bike may be launched in November 2016. To know more, check here...
Story first published: Wednesday, September 28, 2016, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X