பஜாஜ் பல்சர் பிராண்டின் 15 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரமாதமான சலுகைகள்

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்த பல்சர் பிராண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக பல்சர் பிராண்ட் பைக்குகள் மீது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிரமாதமான சலுகைகளை வழங்குகின்றனர்.

பஜாஜ் பலசர் பிராண்ட்டில் தயாரிக்கப்படும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் ஆனது, இந்திய வாடிக்கையாளர்கள் இடையே மிகவும் புகழ்பெற்ற மாடலாக உள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ள சலுகைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் பலசர்...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பஜாஜ் பலசர் பிராண்ட்டை 2001-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. காலம் செல்ல செல்ல, பஜாஜ் நிறுவனம் இந்த பல்சர் பிராண்டின் கீழ் பல்வேறு பைக்குகளை அறிமுகம் செய்தது.

இதில் என்எஸ்200 மற்றும் 200எஃப்ஐ போன்ற மாடல்கள் விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் பல்சர் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட எக்கசக்கமான மாடல்கள் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

பஜாஜ் பலசர் பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்சர் 135 எல்எஸ், 150, 180, 220எஃப் ஆகிய மாடல்கள் மீது சலுகைகளை வழங்குகிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஏஎஸ்150 மற்றும் ஏஎஸ்200 எனப்படும் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக் சீரிஸ் மீதும் இந்த சலுகைகள் கிடைக்கிறது.

ரேஞ்ச்;

தற்போதைய நிலையில், பஜாஜ் பலசர் பிராண்ட்டின் கீழ் 135சிசி முதல் டாப் என்ட் வேரியன்ட்டான ஆர்எஸ்200 வரை விரிவான ரேஞ்ச்சில் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கபடுகிறது.

மேலும், புதிய பல்சர் விஎஸ்400 பைக்கும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தள்ளுபடி;

பஜாஜ் பலசர் பிராண்ட்டின் வெவ்வேறு மாடல்கள் மீது, வெவ்வேறு வகையில் ஒட்டுமொத்தமாக 14,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

வெற்றிக்கான காரணம்;

பஜாஜ் பலசர் பிராண்ட் பைக்குகளின் வெற்றிக்கு முக்கிய காரணங்களே இதன் ஸ்போர்ட்டியான தோற்றம், மிதமான விலை, பிரத்யேக அம்சங்கள் மற்றும் பல்வேறு வேரியன்ட்கள், பல தரப்பட்ட மக்களை வெகுவாக ஈர்க்கிறது. இதனால் தான், இது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

பலசர் விஎஸ்400;

பலசர் விஎஸ்400 மாடலில் விஎஸ்என்பது வேன்டேஜ் ஸ்போர்ட்ஸ் என்பதை குறிக்கிறது. பலசர் விஎஸ்400 பைக்கில், 373சிசி லிக்விட் கூல்ட், 4 வால்வ் ட்ரிபிள் ஸ்பார்க் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள பலசர் விஎஸ்400 பைக்கின் இஞ்ஜின், 34.5 பிஹெச்பியை வெளிப்படுத்தும்.

விலை;

பஜாஜ் பலசர் விஎஸ்400, முன்னதாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சிஎஸ்400 என அழைக்கப்பட்டது. பின்னர் பலசர் விஎஸ்400 என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பஜாஜ் பலசர் விஎஸ்400, 1.5 லட்சாம் ரூபாய் முதல் 1.7 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Bajaj Auto Limited is celebrating 15 years of success of revolutionary motorcycle Pulsar brand. As part of anniversary offers, Bajaj is giving special discount prices on Pulsar 135 LS, 150, 180, 220F and also recently launched Pulsar Adventure Sports series AS150 and AS200. Customers can avail upto 14,000 Rupees of Discounts on various names. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos