புதிய வண்ணத்தில் கிடைக்கும் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள்

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் வி15 மோட்டார்சைக்கிள், மற்றொரு புதிய வண்ணத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலாமாக நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்வதிலும், ஏற்கனவே இருக்கும் தயாரிப்புகளில், மேம்பாடுகள் வழங்குவதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தற்போது புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய வண்ணம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் தங்களின் தயாரிப்புகளின் மதிப்பை தொடர்ந்து கூட்டி வருகிறது. பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், துவக்கத்தில் வெறும் ஒரே ஒரு நிற தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்தது. தற்போது, நடைபெறும் பண்டிகை காலங்களை ஒட்டி, இந்த பஜாஜ் வி15 ஓஷன் புளூ பெயின்ட் வண்ணத்திலும் கிடைக்கிறது.

கிடைக்கும் நிறங்கள்;

தற்போதைய நிலையில், பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், மொத்தம் நான்கு நிறங்களில் கிடைக்கிறது. பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், ஓஷன் புளூ, ஹீரோயிக் ரெட், பியர்ல் வைட் மற்றும் எபோனி பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

விலை;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 62,803 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கொண்டாட்டம்;

அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களுக்குள், பஜாஜ் ஆட்டோ நிறுவனம், வி15 மோட்டார்சைக்கிள் மாடலில் 1.6 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்தது. இதனை கொண்டாடும் விதமாக, இந்த பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், ஓஷன் புளூ பெயின்ட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், வி15 மோட்டார்சைக்கிள் விஷயத்தில் இந்தியாவின் விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் உடன் ஏற்படுத்தி கொண்ட பந்தம் மக்களிடைய சரியான முறையில் சென்று அடைந்துள்ளது. பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களுக்குள் இவ்வளவு அபாரமாக விற்பனையானதே இதற்கு சாட்சியாக உள்ளது.

இஞ்ஜின்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளுக்கு, சிங்கிள் சிலிண்டர் உடைய 149.50 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 11.80 பிஹெச்பியையும், 13 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரேக்;

பஜாஜ் வி15 பிரிமியம் கம்யூட்டர் மோட்டார்சைக்கிளின் முன் பத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Bajaj Auto introduced an enticing colour option for its V15 Motorcycle. Now, Bajaj V15 will be available in an Ocean Blue paint job during 2016 festive season. V15 premium commuter motorcycle in four colour options. Here are the colours available - Ocean Blue, Heroic Red, Pearl White, and Ebony Black. New color option was introduced to celebrate 1.6 lakh unit sale...
Please Wait while comments are loading...

Latest Photos