டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

டுகாட்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஏறக்குறைய அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும், இந்த பண்டிகை காலங்களின் போது, இந்தியாவில் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், பண்டிகை காலத்திற்கு சற்று முன்பாக எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டுகாட்டி எக்ஸ்டயாவெல்...

டுகாட்டி எக்ஸ்டயாவெல்...

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம், குருஸர் மோட்டார்சைக்கிள்களில் எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் என்ற இரு வேரியன்ட்களையும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது, ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது.

டுகாட்டி நிறுவனம், சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யும் அனைத்து மாடல்களையும், இந்தியாவிலும் அறிமுகம் செய்து வருகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் என்ற இரு வேரியன்ட்களுக்கும், 1,262 சிசி, டெஸ்டாஸ்ரெட்டா எல்-ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 156 பிஹெச்பியையும், 129 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் என்ற இரு வேரியன்ட்களின் இஞ்ஜின், இஞ்ஜின்கள் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. கூடுதலாக, ரியர் வீல்களுக்கு பவர் கடத்தும் வகையில், டுகாட்டி நிறுவனம், இந்த குருஸர் மோட்டார்சைக்கிள்களுக்கு சிங்கிள்-சைட் ஸ்விங் ஆர்ம் மற்றும் பெல்ட் டிரைவ் வழங்கியுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மோட்டார்சைக்கிள், அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாக உள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையிலான தலைகீழாக பொருத்தப்பட்டுள்ள ஃபிரண்ட் ஃபோர்க்குகள், பின் பகுதியில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு டிஎஃப்டி ஸ்கிரீன் ஆகிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு பொருத்த வரை, டுகாட்டி நிறுவனம், இந்த எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் மோட்டார்சைக்கிள்களில் டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், ரைட் மோட்கள், கார்ணரிங் ஏபிஎஸ் மற்றும் டுகாட்டி லாஞ்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை சேர்த்துள்ளது.

மேலும், எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளில் குரூஸ் கண்ட்ரோல், முழு எல்இடி லைட்டிங், பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், வேரியபிள் ரைடிங் மோட்கள், கீலஸ் இக்னிஷன் மற்றும் பேக்லிட் ஹேண்டில்பார் ஸ்விட்ச் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

இந்திய வாகன சந்தைகளில், டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள், ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

புக்கிங்;

புக்கிங்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் குருஸர் மோட்டார்சைக்கிளின் புக்கிங், இந்தியா முழுவதும் ஏற்கப்பட்டு வருகிறது.

விலை;

விலை;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் 15.87 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் குருஸர் மோட்டார்சைக்கிள், 18.47 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அஜீத் கைககளுக்கு சவால் விட்ட டுகாட்டி டயாவெல் - ஒரு பார்வை

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம்

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் செப்டம்பர் 15-ல் இந்தியாவில் அறிமுகம்

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Italian motorcycle manufacturer Ducati has launched their cruiser motorcycles - XDiavel and the XDiavel S in India. Technology wise, Ducati XDiavel comes with Ducati Power Launch (DPL), Ducati Traction Control (DTC), Bosch cornering ABS, keyless ignition, cruise control, variable riding modes, and hands free connectivity. This motorcycle has top speed of 240km/h. To know more about Ducati XDiavel, check here...
Story first published: Thursday, September 15, 2016, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X