கவாஸாகி இசட்800 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

Written By:

கவாஸாகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கவாஸாகி இசட்800 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலங்களின் போது பல்வேறு நிறுவனங்கள், ஏராளமான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் கவாஸாகி நிறுவனமும் தங்களின் இசட்800 மோட்டார்சைக்கிளை லிமிட்டெட் எடிஷன் வகையில் அறிமுகம் செய்துள்ளனர்.

கவாஸாகி இசட்800 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

லிமிட்டெட் எடிஷன்...

கவாஸாகி இசட்800 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள், லிமிட்டெட் எடிஷன் வடிவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மாடலில் இந்திய வாகன சந்தைகளுக்கு 10 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

வண்ணம்;

கவாஸாகி நிறுவனத்தின் இந்த இசட்800 லிமிட்டெட் எடிஷன் நேகட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் மோட்டார்சைக்கிள், பிளாக் மற்றும் புளூ பெயின்ட் ஜாப் கொண்டுள்ளது. ஹெட்லைட் மற்றும் இதர பாடி பேனல்களை எடுத்துக்காட்டுவதற்காக குறைந்த அளவிலான ரெட் மற்றும் வைட் நிறம் உபயோகிக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

கவாஸாகி இசட்800 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளுக்கு 4 சிலிண்டர்கள் உடைய அதே 806 சிசி, லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 111 பிஹெச்பியையும், 83 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கவாஸாகி இசட்800 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

செயல்திறன்;

கவாஸாகி நிறுவனம், இந்த கவாஸாகி இசட்800 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட விஷயங்களில் எந்த விதமான மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை.

பிற சந்தைகளில் விற்பனை;

கவாஸாகி நிறுவனத்தின் இதே மாதிரியான இசட்800 மோட்டார்சைக்கிள், தற்போது மலேசியா உள்ளிட்ட பிற ஆசிய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கவாஸாகி நிறுவனம் வழங்கும் இந்திய வாகன சந்தைகளுக்கான இசட்800 மோட்டார்சைக்கிள், பிளாக் மற்றும் கிரீன் பெயின்ட் ஸ்கீமில் விற்கப்படுகிறது. தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிளாக் மற்றும் புளூ நிற தேர்வுகள் நல்ல தேர்வு ஆகும். ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம், மேலும் பல நிறங்களில் இந்த மோட்டார்சைக்கிளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;

கவாஸாகி நிறுவனம் வழங்கும் கவாஸாகி இசட்800 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள், 7.50 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது. இது வழக்கமான இசட்800 மோட்டார்சைக்கிளை காட்டிலும் 15,000 ரூபாய் கூடுதல் விலை கொண்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki introduced an all-new limited edition model for Indian market. This festive season, Japanese manufacturer offers its Z800 in Limited Edition avatar. Only ten units of Z800 Limited Edition are offered in India by Kawasaki Motors. Limited Edition Z800 is priced at Rs. 7.50 lakh ex-showroom (Delhi), which is Rs. 15,000 more than standard variant. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos