மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Written By:

மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம், மிர்ஸியா என்ற பெயரில் செஞ்சூரோ பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள், வெவ்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு, அவ்வப்போது ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், மஹிந்திரா நிறுவனமும், இந்த மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா செஞ்சூரோ மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன் பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன்...

'மிர்ஸியா' என்பது ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா என்ற புகழ்பெற்ற இயக்குனர் உருவாக்கியுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படம், அநேகமாக அக்டோபர் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம். மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் இந்த மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன், இந்த 'மிர்ஸியா' திரைப்படத்தை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்படுகிறது.

அடிப்படை;

மஹிந்திரா செஞ்சூரோ மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன் பைக், மஹிந்திராவின் வழக்கமான செஞ்சூரோ பைக்கை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த மஹிந்திரா செஞ்சூரோ பைக், இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், மஹிந்திரா செஞ்சூரோ, இந்த படத்தில் பிரிக்கமுடியாத அங்கமாக விளங்குகிறது. இந்த படத்தின் கதாநாயகன், இந்த மஹிந்திரா செஞ்சூரோ பைக்கை, இப்படத்தில் இயக்கும் படியான காட்சிகளும் உள்ளன.

'மிர்ஸியா' திரைப்படம்;

'மிர்ஸியா' திரைப்படம், நவீன கால காதல் கதை ஆகும். இது மிர்ஸா-சாஹிபான் என்ற பஞ்சாபி கிராமப்புற கதையை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த சரித்திர புகழ்மிக்க காதல் கதை, பழைய தலைமுறையில் இருந்து தற்போதைய தலைமுறைகளுக்கு தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. இந்த 'மிர்ஸியா' திரைப்படம், ராஜஸ்தானில், எதிரும் புதிருமாக இருக்கும் காதலர்களின் கதையாகும்.

சிறப்பு அம்சம்கள்;

மஹிந்திரா செஞ்சூரோ மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன் பைக், பிரத்யேகமான ஃபிளாட் பிளாக் பெயின்ட் ஸ்கீம் கொண்டுள்ளது. இந்த மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன் பைக் முழுவதும், குதிரையின் டீகேல் உள்ளது. இந்த டீகேல், இந்த பைக்கை தனித்துவமிக்கதாக தோன்ற செய்கிறது. இந்த மஹிந்திரா செஞ்சூரோ மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன் பைக் கொண்டுள்ள பிளாக் மற்றும் கோல்ட் கூட்டு வண்ணக்கலவை, இந்த பைக்கிற்கு ஈர்க்கும் வகையிலான தோற்றத்தை அளிக்கிறது.

அறிமுக விழா;

மஹிந்திரா செஞ்சூரோ மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன் பைக்கின் அறிமுக விழாவில், மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி நவீன் மல்ஹோத்ரா மற்றும் 'மிர்ஸியா' திரைப்படத்தின் நடிகர்களான ஹர்ஷ்வர்தன் கபூர், மற்றும் சையாமி க்ஹெர் ஆகியோர் பங்கேற்றனர்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Mahindra Two Wheelers has launched an all-new Special Edition motorcycle. This Special Edition is developed to celebrate Rakeysh Omprakash Mehra's upcoming movie 'Mirzya'. Present at launch of Mahindra Special Edition Mirzya Centuro were Naveen Malhotra - Mahindra Two Wheelers, Mirzya actors Saiyami Kher and Harshvardhan Kapoor. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos