ராயல் என்பீல்டு தண்டர்கேட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Written By:

மோட்டார் உலகில், கஸ்டம் மோட்டார்சைக்கிள் என்ற வகையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் டூ வீலர்கள் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. காலத்திற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்கள் தங்களின் பைக்குகளையும், மோட்டார்சைக்கிள்களையும் அவரவர் விருப்பம் மற்றும் வசதிக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்வது மிகவும் வாடிக்கையான விஷயமாக உள்ளது.

அந்த வகையில், தற்போது கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு தண்டர்கேட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை, இனி தெரிந்து கொள்ளலாம்.

ராயல் என்பீல்டு ஏன்?

கஸ்டமைஸ் செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களில், ராயல் என்பீல்டு பிரதானமாக உள்ளது. இதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஒட்டுமொத்த டிசைனின் எளிமைத்தனமும், இதன் மெட்டல் பாடியும் மிக முக்கிய காரணமாக உள்ளன. இதனால், கஸ்டமைஸ் செய்து கொள்ள விரும்புபவர்கள், ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களையே அதிகமாக தேர்வு செய்கின்றனர்.

தண்டர்கேட்;

கஸ்டமைஸ் செய்யப்பட்ட சமீபத்திய மாடலாக விளங்குவது ராயல் என்பீல்டு தண்டர்கேட் ஆகும். பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் புல்லட்டீர் கஸ்டம்ஸ் (Bulleteer Customs) நிறுவனம், இந்த பணியை மேற்கொண்டுள்ளது.

புல்லட்டீர் கஸ்டம்ஸ் என்ற மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் செய்யும் நிறுவனம், 2005-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சிறிய யார்ட்டில் துவங்கிய இந்த நிறுவனம், தற்போது நன்கு வளர்ந்து புகழ்பெற்றுள்ளது.

பிரயோகிக்கப்பட்ட மாடல்;

ராயல் என்பீல்டு தண்டர்கேட் மாடல் செய்வதற்கு, ராயல் என்பீல்டு தண்டர்பர்ட் 500 மோட்டார்சைக்கிள் தான் உபயோகிக்கப்பட்டுள்ளது. க்ரூஸர் போல் காட்சியளிக்கும் ராயல் என்பீல்டு தண்டர்பர்ட் 500, கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் போல் மாற்றப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்;

ராயல் என்பீல்டு தண்டர்பர்ட் 500 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு தண்டர்கேட் மாடலாக மாற்றுவதற்கு, டேமேக்கர் ஹெட்லைட்கள், 120 செக்ஷன் ஃபிரண்ட் டயர் மற்றும் 190 செக்ஷன் ரியர் டயர் டயர்கள், ஆஃப்-செட் ரியர் டயர்கள், டிஜிட்டல் ஸ்பீடோ கன்சோல், ஹேண்டில் பார்களில் கிளிப்கள் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், பார் முனையில் இருக்கும் கண்ணாடிகள், சிங்கிள் சீட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள், மருவடிவமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் மற்றும் போட்டிகளில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயின்ட் ஜாப் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இறுதி கருத்து;

இவ்வாறு தங்களின் மோட்டார்சைக்கிள்களை கஸ்டமைஸ் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களின் மோட்டார்சைக்கிள்களையும் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

முகவரி;

புல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ள;

Bulleteer Customs:
Call : +91-9972862139, +91-9738075289
Bangalore E-mail : bulleteercustom@gmail.com
Facebook : www.facebook.com/bulleteer.customs

புல்லட்டீர் கஸ்டம்ஸ்
மொபைல் : +91-9972862139, +91-9738075289
மின்னஞ்சல் முகவரி : bulleteercustom@gmail.com
ஃபேஸ்புக் : facebook.com/bulleteer.customs

English summary
Thundercat becomes the latest build from Bulleteer Customs, custom bike building outfit based in Bangalore. The Motorcycle used for this particular build is Royal Enfield Thunderbird 500. Cruiser has been chopped down to look like cafe racer. Touches such as Daymaker headlights, off-set rear monoshock, digital speedo console, clip on handlebars helps to change looks. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos