சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், தயாரித்து விற்பனை செய்யும் ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் தொடர் பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதை ஒட்டி, சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் பல்வேறு அறிமுகங்களை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறாக, தற்போது அறிமுகம் செய்யப்பட்ட சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பெஷல் எடிஷன்...

ஸ்பெஷல் எடிஷன்...

தொடர் பண்டிகை காலங்களை ஒட்டி, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் அறிமுகங்களை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுஸுகி நிறுவனம், தங்கள் தரப்பில் சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரை ஸ்பெஷல் எடிஷன் அவதாரத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.

சிறப்புகள்;

சிறப்புகள்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டருக்கு பிரத்யேகமான பெயிண்ட் வேலைப்பாடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.

ஸ்பெஷல் எடிஷன் டேக் உடன், சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன், கூடுதல் ஸ்டைலாக காட்சியளிக்கிறது. இதன் ரெட்ரோ தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் சில விஷுவல் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மெக்கானிக்கல் மாற்றங்கள்;

மெக்கானிக்கல் மாற்றங்கள்;

சுஸுகி நிறுவனம் இந்த சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில், எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் உள்ள 124 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் தான் இந்த சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரிலும் உள்ளது. இந்த இஞ்ஜின், 8.58 பிஹெச்பியையும், 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர், ஒரு லிட்டருக்கு 64 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான திறன் கொண்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்;

முக்கிய மாற்றங்கள்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில், குரோம் பூச்சு உடைய ரியர் வியூ மிரர்கள் உள்ளன. இதற்கு வழங்கப்பட்டுள்ள மெரூன் லெதர் சீட், இதன் ரெட்ரோ டிசைனுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரின் உட்புற லெக் ஷீல்டில் உள்ள பிரவுன் ஃபினிஷ், வெள்ளை நிறத்திலான பாடி மற்றும் மெரூன் சீட் ஆகிய அம்சங்கள் இதற்கு பிரத்யேகமான ஈர்ப்பை வழங்குகிறது.

வண்ணம்;

வண்ணம்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டருக்கு சுஸுகியின் பியர்ல் மிராஜ் வைட் கலர் ஸ்கீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றப்படி, இந்த ஸ்பேஷல் எடிஷனுக்காக எந்த விதமான பிரத்யேகமான பெயின்ட் வேலைப்பாடுகளும் செய்யப்படவில்லை.

இந்த ஸ்கூட்டரின் டிசைன் சித்தாந்தத்தை எடுத்து காட்டும் வகையில், ஆங்காங்கே சில சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

விலை;

விலை;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் - டிரம் பிரேக் கொண்ட மாடல் - 61,050 (ஆன்-ரோட் டெல்லி)

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் - டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் - 64,606 (ஆன்-ரோட் டெல்லி)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் நாளை இந்தியாவில் அறிமுகம்

2016 சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சுஸுகி ஆக்செஸ் Vs மஹிந்திரா டியூரோ Vs புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி: ஒப்பீடு

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் - முன் தோற்றம்

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் - முன் தோற்றம்

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் - முன் தோற்றம்

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் - பக்கவாட்டு தோற்றம்

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் - பக்கவாட்டு தோற்றம்

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் - பக்கவாட்டு தோற்றம்

Most Read Articles
மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Suzuki Motorcycles India has introduced another Special Edition variant, little ahead of upcoming festive season in India. This time, Access 125 scooter receives Special Edition treatment. Many visual updates are added to accentuate this scooter's retro charm. It delivers a mileage of 64km/l. To know more about Suzuki Access 125 Special Edition Scooter, check here...
Story first published: Saturday, September 10, 2016, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X