டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+, டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் புதிய வண்ணத்தில் அறிமுகம்

Written By:

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக்கையும், டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கையும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளனர். பண்டிகை காலங்கள் இந்தியாவில் வேகமாக நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர் அல்லது தற்போது விற்பனையில் உள்ள மாடல்களில் மேம்பாடுகள செய்து வழங்குகின்றனர்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் திட்டான்கள் குறித்த கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

பண்டிகை கால ஏற்பாடுகள்;

சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், பண்டிகை காலத்தை ஒட்டி பிரத்யேகமாக தயாராகி வருகின்றது. இந்நிறுவனம், ஸ்டார் சிட்டி+ பைக், டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கையும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளனர்.

இனி, ஸ்டார் சிட்டி+ பைக் ஸ்பாட்லைட் நிறத்திலும், டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் பிளாக் சில்வர் நிறத்திலும் கிடைக்கும். புதிய வண்ணத்தில் அறிமுகமாகும் இந்த 2 பைக்குகளின் புக்கிங்கும் இந்தியா முழுவதும் ஏற்கப்பட்டு வருகிறது.

டெலிவரி;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஸ்பாட்லைட் நிறத்திலான ஸ்டார் சிட்டி+ பைக்கையும், பிளாக் சில்வர் நிறத்திலான டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கையும் இந்த பண்டிகை காலங்களின்போது டெலிவரி செய்ய திட்டமிட்டு வருகிறது.

மேம்பாடுகள்;

இந்த புதிய நிறத்திலான ஸ்டார் சிட்டி+ பைக்கிலும், டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கிலும் வேறு எந்த விதமான மெக்கானிகல் மாற்றங்களும் செய்யப்படவில்லை.

தற்போதைய வண்ண தேர்வுகள்;

தற்போதைய நிலையில், ஸ்டார் சிட்டி+ பைக் 11 பெயின்ட் ஸ்கீம்களில் கிடைக்கிறது. டிவிஎஸ் ஸ்போர்ட் பைக், 9 ஈர்க்கும் வகையிலான பெயின்ட் ஸ்கீம்களில் கிடைக்கிறது. இந்த அனைத்து நிற தேர்வுகளிலான பைக்குகளும் இந்திய முழுவதும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் கிடைக்கும்.

விலை;

பிளாக் சில்வர் நிறத்திலான டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் - 36,880
ஸ்பாட்லைட் நிறத்திலான ஸ்டார் சிட்டி+ பைக் - 44,300

குறிப்பு; இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
TVS Motors is gearing up for festive season in its own way. TVS Star City+ and Sport are launched in new colour options. TVS Star City+ is launched in Spotlight White color and TVS Sport is available in Black Silver paint scheme. Both these special colours from TVS Motors are available for booking pan India. TVS Motors aim at delivering these bikes for festive season. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos