யுஎம் மோட்டார்சைக்கிள்ஸின் அட்வென்ச்சர் பைக்குகள் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

By Ravichandran

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவில் தங்களின் புதிய அட்வென்ச்சர் பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. இந்திய வாகன சந்தையானது, சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இதனால், பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை இந்தியாவிள் அறிமுகம் செய்து, விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள அட்வென்ச்சர் பைக்குகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முறைப்படி பிரவேசம் செய்தது. அப்போது முதல், இந்நிறுவனம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றனர்.

தற்போதைய மாடல்கள்;

தற்போதைய மாடல்கள்;

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தற்போதைய நிலையில், ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் மற்றும் ரெனிகேட் கமாண்டோ ஆகிய மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது.

புதிய அட்வென்ச்சர் பைக்குகள்;

புதிய அட்வென்ச்சர் பைக்குகள்;

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் புதிய அட்வென்ச்சர் பைக், 2016 இன்டர்மோட் (INTERMOT) ஷோவில் காட்சிப்படுத்தப்படும் என உறுதி செய்துள்ளது. 125 சிசி இஞ்ஜின்கள் உடைய டிஎஸ்ஆர் அட்வென்ச்சர் மற்றும் டிஎஸ்ஆர் அட்வென்ச்சர் டிடி, ஐரோப்பிய சந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்படும்.

இந்தியாவிலும் அறிமுகம்;

இந்தியாவிலும் அறிமுகம்;

டிஎஸ்ஆர் அட்வென்ச்சர் மற்றும் டிஎஸ்ஆர் அட்வென்ச்சர் டிடி ஆகிய இரண்டு அட்வென்ச்சர் மாடல்களுமே இந்திய வாகன சந்தைகளுக்கு kondu வரப்படும். எனினும், யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்த 2 மாடல்களுக்கும் பெரிய இஞ்ஜின்கள் பொறுத்த உள்ளது. இந்த இஞ்ஜின்கள் 200 சிசி முதல் 600 சிசி-க்கும் இடையிலான கொள்ளளவு கொண்டதாக இருக்கும்.

கூடுதல் தேர்வு;

கூடுதல் தேர்வு;

தற்போதைய நிலையில், நுழைவு நிலை அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் செக்மென்ட்டில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் ரூபத்தில் ஒரே ஒரு தேர்வு மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்த நுழைவு நிலை அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் செக்மென்ட்டில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சுவாரஸ்யமான தேர்வுகளை வழங்க எண்ணம் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வழங்க நினைக்கும் அட்வென்ச்சர் பைக்குகள், இந்தியாவில் 2018-ல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். அடுத்த சில ஆண்டுகளுக்கு, குரூஸர் செக்மென்ட்டில், கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்

யுஎம் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்- விலை குறைவான பிரிமியம் மாடல்!

யுஎம் மோட்டார்சைக்கிள்களின் புக்கிங் மீண்டும் துவங்கியது

Most Read Articles
English summary
America-based UM Motorcycles has confirmed that an all-new Adventure Motorcycle will be showcased at 2016 INTERMOT. DSR Adventure and DSR Adventure TT would be unveiled with 125cc engines for European market. Both Adventure models from UM Motorcycles will be brought to India with bigger engines, which would be 200cc to 600cc range engines. To know more, check here...
Story first published: Thursday, September 22, 2016, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X