யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இஞ்ஜின்களை இந்தியாவில் தயாரிக்க திட்டம்

Posted by:

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவில் தங்கள் வாகனங்களுக்கான இஞ்ஜின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் , தங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில், யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமும் தங்கள் டூ வீலர்களுக்கான இஞ்ஜின்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய திட்டம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உற்பத்தி;

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தங்களின் டூ வீலர்களின் தயாரிப்பை முழுவதுமாக லோக்கலைசேஷன் (localisation) எனப்படும் உள்ளூர்மயமாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவில் தங்களின் தடத்தை விரிவுப்படுத்த எண்ணம் கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் லோஹியா ஆட்டோ என்ற இந்திய நிறுவனத்துடன் கூட்டுமுயற்சியில் இறங்கி நடுத்தர திறன் உடைய இஞ்ஜின் கொண்ட (mid-engine capacity motorcycles) மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

இறக்குமதி;

தற்போதைய நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவன டூ வீலர்களின் இஞ்ஜின்களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. தற்போது இந்நிறுவனம், இஞ்ஜின் மற்றும் அவற்றிற்கு தேவையான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

தற்போதைய உற்பத்தி முறை;

தற்போதைய நிலையில், யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் லோக்கலைசேஷன் 60% என்ற அளவிலும், இஞ்ஜின் உள்ளிட்டவை 40% இறக்குமதி செய்யப்படுவையில் அடங்கும். இதற்கு பதிலாக, இந்நிறுவனம், தங்களுக்கு தேவையான இறக்குமதி செய்யப்படும் இஞ்ஜின் உள்ளிட்ட மீதி பொருட்களை தங்களின் உற்பத்தி ஆலையிலேயே உற்பத்தி செய்யவோ அல்லது அந்த பொறுப்பினை பிற நிறுவனங்களிடமோ ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. எனினும், இது குறித்த இறுதி முடிவு அடுத்த 3 மாதங்களில் எடுக்கப்படும் என செய்திகள் வெளியாகின்றன.

கிடைக்கும் மாடல்கள்;

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில், ரெணிகேட் கமாண்டோ மற்றும் ரெணிகேட் ஸ்போர்ட்ஸ் ஆகிய 300சிசி செக்மென்ட்டை சேர்ந்த இரு மாடல்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ரெணிகேட் கமாண்டோ 1.49 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், ரெணிகேட் ஸ்போர்ட்ஸ் 1.59 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வருங்கால திட்டம்;

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், ரெணிகேட் கிளாஸிக் மோட்டார்சைக்கிளை மார்ச் 2017-ல் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், அடுத்தடுத்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டம் கொண்டுள்ளனர்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, September 26, 2016, 10:57 [IST]
English summary
UM Motorcycles is planning to fully localise its bikes in India as it planning to strengthen their presence in India. US-based UM International has joint venture with Lohia Auto in India to sell mid-engine capacity motorcycles. UM Motorcycles said, current level of localisation is 60 percent and remaining 40 percent (mostly engines) are imported. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos