ஹோண்டா நவி அட்வென்ச்சர் மற்றும் க்ரோம் எடிசன் விரைவில் வருகை!

Written By:

கூடுதல் அலங்காரம் மற்றும் ஆக்சஸெரீகள் கொண்ட ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என தெரிகிறது. இந்த புதிய மாடல்களில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா நவி அட்வென்ச்சர் எடிசன் மாடலில் உயரமான விண்ட்ஸ்கிரீன் கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோன்று, கைப்பிடிகளுக்கு விசேஷ கவர்களும் இடம்பெற்றிருக்கும். இதனால், சாதாரண மாடலிலிருந்து வேறுபட்ட தோற்றத்தை பெறும்.

ஹோண்டா நவி அட்வென்ச்சர் எடிசன் மாடல் இரட்டை வண்ணக் கலவையில் வருகிறது. மேலும், ஹோண்டா நவி ஸ்கூட்டரில் பாதுகாப்பாக பொருட்களை வைப்பதற்கான பெட்டிகளும் கொடுக்கபப்பட்டு இருக்கும். விசேஷ வகை டயர்களும் முரட்டுத்தனமான தோற்றத்தை தருகிறது.

மறுபுறத்தில் ஹோண்டா நவி க்ரோம் எடிசன் மாடலில் பிரத்யேகமான வண்ணத்தில் வர இருக்கிறது. இரண்டு மாடல்களின் தோற்றம் மிகவும் பிரத்யேகமானதாக இருக்கும். எஞ்சினில் எந்த மாறுதல்களும் இருக்காது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 110சிசி எஞ்சின்தான் ஹோண்டா நவி ஸ்கூட்டரில் உள்ளது. இந்த எஞ்சின் 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா நவி ஸ்கூட்டருடன் சேர்த்து ஹோண்டா நவி அட்வென்ச்சர் மாடலும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹோண்டா நவி அட்வென்ச்சர் எடிசனில் இடம்பெற்றிருக்கும் பெட்லோல் டேங்கிற்கு கீழே இருக்கும் ஸ்டோரேஜ் பெட்டி மற்றும் இதர ஆக்சஸெரீகளை சாதாரண நவி ஸ்கூட்டரிலும் வாங்கி பொருத்திக் கொள்ளும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, January 2, 2017, 11:16 [IST]
English summary
Honda is gearing up to launch the Navi Adventure and Chrome Editions in India and here is what you can expect.
Please Wait while comments are loading...

Latest Photos