இந்தியாவில் காப்புரிமை பெற்று தயாரான ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300- சிறப்புத் தகவல்கள்

பி.எம்.டபுள்யூ ஜி310 ஜி.எஸ் மற்றும் கே.டி.எம் டூக் 390 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா தயாரித்திருக்கும் மாடல் எக்ஸ்.ஆர்.இ 300. இந்த பைக் குறித்த பல முக்கிய தகவல்களை இனி பார்க்கலாம்.

By Azhagar

இந்தியாவில் ஹோண்டா அடுத்தடுத்து 4 மாடல்கலை களமிறக்குகிறது. உயர் ரக வாடிக்கையாளர்களை குறிவைத்து ஹோண்டா தயாரிக்கும் இந்த 4 மாடல்களில் சி.பி.ஆர் 1000 ஆர்.ஆர் மோட்டார் சைக்கிளுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் எழுந்துள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

சி.பி.ஆர் 1000 ஆர்.ஆர் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஹோண்டா அடுத்து வெளியிடும் மாடல் ஆஃப்ரிக்கா ட்வின் அட்வென்சர் பைக்.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

இந்த மாடலை தொடர்ந்து ஏற்கனவே ஹோண்டா தயாரிப்புகளில் பெயர் பெற்ற சி.பி. ஹார்னெட் பைக்கை மேம்படுத்தி சி.பி. ஹார்னெட் 160ஆர் என்ற பெயரில் ஹோண்டா வெளியிடவுள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

இதுபோன்ற உயர் ரக மாடல் மட்டுமில்லாமல், அதிரடியாக தனது புதிய 4 மாடல்களில் அனைவருக்கும் ஏற்றார் போன்ற செயல்திறனை கொண்ட ஒரு பைக்கையும் ஹோண்டா தயாரித்து வைத்துள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

எக்ஸ்.ஆர்.இ 300 என்ற பெயரில் தயாராகி உள்ள இந்த மாடல் மோட்டார் சைக்கிளை நாம் அட்வென்சர் ரைட்டிற்கும் பயன்படுத்தலாம்.

இந்த மாடல் தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், இந்தியாவிலுள்ள ஹோண்டாவிற்கான தொழிற்சாலை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட எக்ஸ்.ஆர்.இ 300 உளவுப் படங்கள் வெளிவந்து வைரலானது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

அனைவருக்கும் ஏற்றார் போன்ற விலையில், செயல்திறனை கொண்டுள்ள எக்ஸ்.ஆர்.இ 300 பைக்கிறான காப்புரிமையை சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் பெற்றுள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

தோற்றத்திலும், செயல்திறனிலும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் இந்தாண்டில் விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

ஹோண்டாவின் அடிப்படை மாடல்களில் இதுவரை இல்லாத புதிய தொழில்நுட்பங்களுடன் எக்ஸ்.ஆர்.இ 300 மோட்டார் சைக்கிளின் செயல்திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

291.6 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃபோர் ஸ்டோர்க் கொண்டு இந்த பைக்கின் எஞ்சின் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சின் சூடானால் தானாகவே குளிர்ந்துக்கொள்ளக்கூடிய திறனும் இதில் உள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

25 பி.எச்.பி பவர் வழங்கும் இந்த பைக்கின் எஞ்சின், 27.6 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இதில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300 பைக்கின் முன்பகுதியில் 245மிமீ அளவுக்கொண்ட டெலஸ்கோபிக் ஃபோர்க் உள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

மேலும் அதிர்வை தாங்கிக்கொள்ளக்கூடிய மோனோ-ஷாக் அப்ஸபரும் இந்த மாடல் பைக்கில் உள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

பைக்கின் பிரேக் அமைப்புகளை குறித்து பார்த்தால் முன்சக்கரத்தில் 256மிமீ அளவில் ஒற்றை டிஸ்க் பிரேக் உள்ளது. பின்பகுதிக்கான பிரேக் 220மிமீ அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

இந்த இரண்டு பிரேக் அமைப்புகளும் இந்திய அரசின் பாதுகாப்பு வழிமுறைக்களுக்கான அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு ஏ.பி.எஸ் தொழில்நுட்பம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

சுமார் 153 கிலோ கிராம் எடைக்கொண்ட ஹோண்டாவின் புதிய எக்ஸ்.ஆர்.இ 300 பைக் இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்ட ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300

மேலும் இந்த பைக்கின் விலை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 வரைக்குள் நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda XRE 300 adventure bike is powered by a 292cc mill churning out 25bhp and 27.6Nm of torque; will lock horns with upcoming KTM Duke 390 Adventure and BMW G310 GS.
Story first published: Wednesday, May 3, 2017, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X