ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலையேறப்போகும் இருசக்கர வாகனங்களின் விலை : முழு தகவல்கள்..!!

ஜிஎஸ்டி வரி விதிப்பால் இருசக்கர வாகனங்களில் விலை அதிகரிக்கவுள்ளது. இதுப்பற்றிய முழு தகவல்கள் இனி

Written By:

ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் இந்தியாவில் அத்தியாவச பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் 350சிசி-க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் 30 சதவீத வரிவிதிப்பை பெறும் நிலை உருவாகியுள்ளது.

வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதில் ஸ்கூட்டர்கள் உட்பட இருசக்கர வாகனங்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.

மேலும் 350சிசி மற்றும் அதற்கு மேல் திறன் பெற்ற வாகனங்கள் அனைத்திற்கும் 31 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

இருசக்கர வாகனங்கள், ஜி.எஸ்.டி-யின் கீழ் 28 சதவீத வரி விதிப்பை பெற்றாலும் மறைமுக வரியில் எந்த மாற்றமும் இருக்காது.

ஆனால் 350-சிசிக்கு அதிகம் திறன் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் கூடுதலாக 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் மீது அரசு நிர்ணயித்துள்ள இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய அச்சங்கத்தில் தலைவர் விநோத் தாசரி "விகிதங்கள் தொழிற்துறையினர் எதிர்பார்ப்புப் படி தான் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அனைத்து வரி விதிப்பையும் ஒரே முறையாக மாற்றி வரி சுமை குறைக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆட்டோமொபைல் துறைக்கு இந்தியாவில் ஏற்றத்தை தான் உருவாக்கும் எனவும், உலகளவில் இது இந்தியாவிற்கு வலிமையை ஏற்படுத்தும் எனவும் விநோத் தாசரி கூடுதலாக தெரிவிக்கிறார்.

இருசக்கர வாகனங்களின் விலையில் ஏற்றம் இருக்குமோ இல்லையோ, ஆனால் மோட்டார் சைக்கிள்களை சொந்தமாக்க நாம் நிறைய செலவழிக்க வேண்டும்.

காரணம் இருசக்கர வாகனங்கள் 18 சதவீத வரிவிதிப்பை ஜி.எஸ்.டி-யில் பெற்றாலும், உதிரிபாகங்களின் வரிவிதிப்பு 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி யின் மூலம் அதிகரிக்கிறது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, May 20, 2017, 16:49 [IST]
English summary
As per the new Goods and Service Tax (GST), motorcycles with engine capacity above 350cc will attract 31 percent tax; effective July 1, 2017.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK