ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி பைக் மாடல் விரைவில் நிறுத்தம்?

Written By:

ராயல் என்ஃபீல்டின் கேஃபே ரேசர் என்று அழைக்கப்படும் காண்டினெண்டல் ஜிடி மாடலுக்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாடலை ராயல் என்ஃபீல்டு தனது லைன் அப்பில் இருந்து நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காண்டினெண்டல் ஜிடி மோட்டார்சைக்கிளை கடந்த 2013 நவம்பரில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

1960-களில் இருந்த பழமையான புல்லட்களின் ரெட்ரோ தோற்றத்துடன், சமீபத்திய தொழில்நுட்ப அம்சங்கள் கலந்த கலவையாக இந்த பைக் உள்ளது.

காண்டினெண்டல் ஜிடியில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 535சிசி இஞ்சின் மிகவும் வலிமையானதாகவே விளங்குகிறது.

பல்வேறு நாடுகளிலும் காண்டினெண்டல் ஜிடி பைக்குகள் பந்தயங்களில் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பந்தயம் ஒன்றில் கூட முதல் பரிசை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்தியாவில் சமீபகாலமாக இந்த பைக்கின் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 26 காண்டினெண்டல் ஜிடி மோட்டார்சைக்கிள்களே விற்பனையாகியிருந்தன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (பிப்ரவரி 2016 - 22 ) இதைவிட குறைவாகவே விற்பனை ஆகியிருந்த போதிலும்.

சென்ற மார்ச் மாதம் இதைவிட கீழாக சென்றது காண்டினெண்டல் ஜிடியின் விற்பனை.

அறிமுகம் ஆன புதிதில் இருந்து இல்லாத அளவாக கடந்த மார்ச்சில் வெரும் 15 பைக்குகள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது கவனிக்கத்தக்கது.

கடந்த நவம்பரில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 100 என்ற அளவை இந்த மாடல் கடக்கவே இல்லை.

இதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக மோசமான எண்ணிக்கையிலேயே விற்பனை நடப்பது அந்நிறுவனத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி பைக்கின் மறைமுக போட்டியாளராக விளங்குவது ஹார்லி டேவிட்சனின் ஸ்ட்ரீட் ராட் 750 மாடல் பைக் ஆகும்.

காண்டினெண்டல் ஜிடி பைக்கை காட்டிலும் இருமடங்கு விலை கொண்ட ஸ்ட்ரீட் ராட் 750 பைக்கின் விற்பனை கடந்த மார்ச்சில் 118 ஆக உள்ளது.

அதேநேரத்தில் ஹார்லி டேவிட்சனின் ஆரம்ப விலை கொண்ட இந்த மாடல் செப்டம்பர் 2016 முதல் ஒவ்வொரு மாதமும் காண்டினெண்டல் ஜிடியின் விற்பனையை முந்தியுள்ளது.

9 லட்ச ரூபாய் விலை கொண்ட ஹார்லி டேவிட்சனின் 883 அயன், 6 லட்ச ரூபாய் விலை கொண்ட ஹோண்டா சிபிஆர் 650 எஃப், 14 லட்ச ரூபாய் விலை கொண்ட ஹயபூசா ஆகிய மாடல்களின் விற்பனையை காட்டிலும் ஜிடி பைக்கின் விற்பனை மிகக் குறைவாகவே உள்ளது.

5.63 லட்ச ரூபாய் விலை கொண்ட கவாஸாகி நிஞ்சா 650 பைக் கூட 152 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி இருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

தற்போது ராயல் எஃன்பீல்டு நிறுவனத்தின் விற்பனையை தூக்கி பிடித்திருப்பது கிளாசிக் 350 புல்லட் மாடலே ஆகும்.

எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் அட்வெஞ்சர் ரக ஹிமாலயன் பைக்காலும் ராயல் என்ஃபீல்டு சோதனையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் கடந்த 2016-17 நிதி ஆண்டில் காண்டினெண்டல் பைக்கின் விற்பனை 1,156 ஆக உள்ளது.

ஆனால், ஹார்லியின் ஸ்ட்ரீட் 750 மாடலின் விற்பனை அதைவிட அதிகமாக 2113 ஆக உள்ளது.

காண்டினெண்டல் ஜிடி பைக்கின் விற்பனை சரிவடைந்துள்ளதை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உற்று நோக்கியபடியே உள்ளது.

பிரீமியம் செக்மெண்டில் 2.25 லட்ச ரூபாய் விலை கொண்ட ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

காட்டினெண்டல் ஜிடி பைக் விற்பனையில் இருக்கக்கூடிய சரிவு சரிக்கட்டப்பட்டால் மட்டுமே இந்த பைக்கிற்கு எதிர்காலம் இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு கான்டினெண்டல் ஜிடி பைக்கில் 535சிசி இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 29.1 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

விற்பனை மேலும் சரிவை சந்திக்குமேயானால் இந்த பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு கைவிட வாய்ப்பு உள்ளது.

அதே சமயம் இதற்கு பதிலாக இரண்டு சிலிண்டர்கள் கொண்ட காண்டினெண்டல் ஜிடி 750 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

English summary
Read in Tamil about Royal Enfield Continetal GT bike sales sees a downside. chances of withdraw and introduce continental gt750.
Please Wait while comments are loading...

Latest Photos