இந்தியாவில் யெட்டி எஸ்யூவி காருக்கு வழியனுப்பு விழா நடத்த இருக்கும் ஸ்கோடா நிறுவனம்..!

Written By:

ஸ்கோடா நிறுவனம் விரைவில் புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளதால், ஏற்கெனவே விற்பனையில் உள்ள யெட்டி எஸ்யூவி காரை கைவிட முடிவு செய்துள்ளது.

பிரபல ஜெர்மன் நிறுவனமான ஸ்கோடா அதன் யெட்டி மாடலை கடந்த 2010ல் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தது.

எனினும், இந்த மாடலால் இந்திய சந்தையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

யெட்டி கார் ஸ்கோடாவின் பிரத்யேக ஸ்லீக் டிசைன் கொண்டதாகும். இதன் காம்பாக்ட் அளவு காரணமாக போக்குவரத்து நிறைந்த சாலைகளுக்கு ஏற்றதாக விளங்கியது.

இதன் காரணமாக அதன் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு யெட்டி காரை கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்கோடா நிறுவனம் சிறிதளவில் மேம்படுத்தியது.

ஏற்கெனவே தோற்றத்தில் சிறந்து விளங்கிய யெட்டி காரின் முகப்பு மேலும் மேம்படுத்தப்பட்டது. பெரிய ஃபாக் விளக்குகளுக்கு பதிலாக சிறிய விளக்குகள் கொடுக்கப்பட்டது.

முன்புற பம்பர் மற்றும் கிரில் ஆகியவை மெருகேற்றப்பட்டன. இதன் பின்னரும் கூட யெட்டியில் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.

மஸ்குலர் தோற்ற அமைப்பு இல்லாததாலும், அதிக விலை கொண்டு இருந்ததாலும் யெட்டி கார் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

கடந்த அக்டோபர் 2016ல் 5 யெட்டி கார்களே விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 6 மாத காலத்தில் இந்த மாடலின் அதிகபட்ச மாத விற்பனை என்பது கவனிக்கத்தக்கது.

இதே போல கடந்த டிசம்பர் மாதத்திலும், சென்ற மார்ச் மாதத்திலும் மிகவும் குறைந்த அளவாக வெறும் 2 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

ஆக, விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத இந்த மாடலை தற்போது கைவிடுவதாக ஸ்கோடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

யெட்டி மாடல் கைவிடப்படுவது, ஸ்கோடா நிறுவனத்தின் லைன்-அப்பில் புதிய கோடியாக் பிரிமியம் எஸ்யூவி காருக்கு வழிவிட உள்ளது.

அண்மையில் ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இணையப்பக்கத்திலும் இடம்பெற்றுவிட்ட இந்த எஸ்யூவிக்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது.

சிறிய எஸ்யூவி என்ற செக்மெண்டில் இடம்பிடித்திருந்த யெட்டி மாடலுக்கு பதிலாக புதிய கரோக் என்ற மாடலை அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா நிறுவனம்.

ஐரோப்பிய சந்தையில் இந்த ஆண்டின் இறுதியிலும், அடுத்த ஆண்டில் இந்தியாவிலும் புதிய கரோக் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா நிறுவனம்.

English summary
Read in Tamil about Skoda discontinues yetti car model in india
Please Wait while comments are loading...

Latest Photos