யமஹா ஆர்-3 Vs கேடிஎம் ட்யூக் 390: இரண்டுக்கும் நடந்த பந்தயத்தில் வென்றது எந்த பைக் தெரியுமா?

Written By:

யமஹா ஆர்-3 மற்றும் கேடிஎம் ட்யூக்390 பைக்குகளுக்கு இடையில் நடத்தப்பட்ட பந்தயத்தில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளது.

யமஹா ஆர்-3 மற்றும் கேடிஎம் ட்யூக்390 பைக்குகளுக்கு இடையில் நடத்தப்பட்ட பந்தயத்தில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளது.

ஆனால் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே உரித்தானது வேகம் தான். ஆக வேகத்தில் சிறந்தது எது என்பது இரண்டுக்கும் இடையில் பந்தயம் நடந்தால் தெரியவரும்.

யமஹாவின் ஆர்-3 ஸ்கூப் உள்ளிட்ட ஆக்ஸஸரிகள் கொண்ட ஒரு முழுமையான பைக் ஆகும். கேடிஎம்மின் புதிய ட்யூக்390 ஒரு நேகட் ஸ்போர்ட் பைக்காகும்.

இரண்டில் எது சிறந்தது என்பதனை தெரிந்து கொள்ளும் முன்பாக இரண்டு பைக்குகளின் முக்கிய அம்சமான அவற்றின் இஞ்சின் குறித்து தெரிந்து கொள்வோம்.

புதிய வரவான கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 373சிசி லிக்விட் கூல்டு இஞ்சின் உள்ளது.

புதிய வரவான கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 373சிசி லிக்விட் கூல்டு இஞ்சின் உள்ளது.

இதேபோல யமஹாவின் ஆர்-3 பைக்கில் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 321சிசி லிக்விட் கூல்டு இஞ்சின் உள்ளது.

இந்த இஞ்சின் அதிகபட்சமாக 41 பிஹச்பி ஆற்றலையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தவல்லதாகும். இதிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

யமஹா ஆர்-3 மோட்டார் சைக்கிள் 169 கிலோ எடை கொண்டதாக உள்ளது. கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் எடை 163 கிலோவாகும்.

இஞ்சின் மற்றும் எடையின் அடிப்படையில் இரண்டு பைக்கையும் ஒப்பிட்டால் கேடிஎம் ட்யூக் 390 பைக் முன்னிலை வகிக்கிறது.

அதே போல எடைக்கு தகுந்த இஞ்சின் ஆற்றல் அடிப்படையில் ஒப்பிட்டாலும் யமஹா ஆர்-3 யை முந்துகிறது கேடிஎம் ட்யூக்390 பைக்.

நம்முடைய ஒப்பீடு அனைத்தும் ஏட்டளவிலேயே உள்ளதால் எந்த பைக் வேகத்தில் சிறந்தது என்பதனை மேலே உள்ள வீடியோவில் காணுங்கள்.

கேடிஎம் ட்யூக்390 பைக்கால் யமஹா ஆர்-3யின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியவில்லை என்பது மேலே உள்ள வீடியோ மூலம் தெளிவாகிறது.

யமஹா பைக்குகள் ஆண்டாண்டு காலமாக தொழில்முறை பந்தயங்களில் சிறந்து விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யமஹா நிறுவனம் பிரத்யேக மேம்பட்ட தொழில்நுட்பங்களை கையாண்டு வருவது தெரிந்ததே.

கேடிஎம் ட்யூக்390 மோட்டார்சைக்கிளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 170 - 180 கிமீ ஆக உள்ள நிலையில் யமஹா ஆர்3 மணிக்கு 180 - 190 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about speed test between Yamaha R3 vs KTM Duke 390 bikes.
Please Wait while comments are loading...

Latest Photos