எம்ஜி Hector Plus

எம்ஜி Hector Plus
Style: எஸ்யூவி
17.29 - 19.50 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

எம்ஜி Hector Plus கார் 2 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. எம்ஜி Hector Plus காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். எம்ஜி Hector Plus காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். எம்ஜி Hector Plus காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. எம்ஜி Hector Plus கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

எம்ஜி Hector Plus பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
17,29,000
எஸ்யூவி | Gearbox
19,50,000

எம்ஜி Hector Plus விமர்சனம்

எம்ஜி Hector Plus வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் வெற்றிகரமான எஸ்யூவி மாடலாக இருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அதிக இருக்கை வசதி கொண்ட மாடலாக ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஹெக்டர் 5 சீட்டர் மாடலில் இருந்து வேறுபடுத்தும் வகையில் கூடுதல் நீளம் மற்றும் சிறிய டிசைன் மாற்றங்களை ஹெக்டர் ப்ளஸ் பெற்றுள்ளது. க்ரோம் வில்லைகள் பதிக்கப்பட்ட முகப்பு க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பம்பர் மற்றும் பனி விளக்குகள் அறை சிறிய மாற்றத்துடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டில் அழகான அலாய் வீல்கள், ஜன்னல்களுக்கு கீழாக உள்ள க்ரோம் கம்பி மற்ரும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை பிரிமீயமாக இருக்கிறது. அழகிய டெயில் லைட்டுகள், சுறாத்துடுப்பு போன்ற ஆன்டென்னா, ஸ்பாய்லர், கம்பீரமான பம்பர்களுடன் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியைவிட நீளம் மட்டும் 65 மிமீ கூடுதலாகி இருக்கிறது. ஆனால், வீல்பேஸ் ஒன்றுதான் என்பது கவனிக்கத்தக்க விஷயம். இன்டீரியரும் மிகவும் பிரிமீயமாக உள்ளது. இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.

எம்ஜி Hector Plus எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சிவிடி மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் ஹைப்ரிட் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வழங்கப்படுகிறது. இதன் டீசல் எஞ்சின் 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

எம்ஜி Hector Plus மைலேஜ்

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.56 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 11.67 கிமீ மைலேஜையும், டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.65 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும்.

எம்ஜி Hector Plus முக்கிய அம்சங்கள்

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் இருக்கைகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. இந்த காரில் 60 விதமான வசதிகளை வழங்கும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளது. வாய்ஸ் கமாண்ட் வசதி, வைஃபை கனெக்ட்டிவிட்டி வசதிகளும் இருக்கின்றன.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

எம்ஜி Hector Plus தீர்ப்பு

டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவான எஸ்யூவி மாடலாக கூறலாம். மேலும், இந்த காரில் 6 சீட்டர் அல்லது 7 சீட்டர் தேர்வுகள் வழங்கப்படுவதுடன், 5 சீட்டர் ஹெக்டரைவிட சற்றே கூடுதல் நிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இது வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் என்று கூறலாம்.

வண்ணங்கள்


Celadon Blue
Pearl White
Aurora Silver
Glaze Red
Starry Black

எம்ஜி Hector Plus படங்கள்

எம்ஜி Hector Plus Q & A

எம்ஜி ஹெக்டர் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூயில் எத்தனை இருக்கை வசதி கொண்ட மாடல்கள் வழங்கப்படுகின்றன?

6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+