ரூ.35.13 லட்சத்தில் புதிய க்யூ-5 எஸ்யூவி கார்: ஆடி அறிமுகம்

இந்த வகையில், பிசினஸ் கிளாஸ் ரகத்தில் தனது க்யூ-5 எஸ்யூவி காரை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மும்பையில் ரூ.35.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2.0 லிட்டர் டிடிஐ எஞ்சினுடன் வந்துள்ள இந்த கார் டிரைவிங்கில் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று ஆடி தெரிவித்துள்ளது.
க்யூ-5 அறிமுக விழாவில் பேசிய ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறியதாவது:
"ஆடி கார்களுக்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதை தக்கவைக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
புதிய க்யூ-5 காரும் எங்களது பிராண்டு மதிப்பை இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிகரிக்கும் என்பது திண்ணம்.
கடந்த ஆண்டு 3,003 கார்களை விற்பனை செய்தோம். ஆனால், இந்த எண்ணிக்கையை ஏற்கனவே கடந்து விட்டோம்.
இந்த ஆண்டு 5,000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். வரும் அக்டோபர் முதல் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








