4 மீட்டர் கூட காரின் நீளம் இருக்காது! எலெக்ட்ரிக்கில் வந்தாலும் விலை 10 லட்சத்திற்குள் தான்!
ரெனால்ட் (Renault) நிறுவனம் மார்ச் 10ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய அளவில் சிறியதான எஸ்யூவி (SUV) ரக காரின் கான்செப்ட்டை வெளியீடு செய்ய உள்ளது. இது விரைவில் வருகிற மார்ச் 17ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய டஸ்டர் (Duster) காரின் அடிப்படையிலான மினி வெர்சனாக கொண்டுவரப்படுகிறது. அதாவது, டஸ்டர் காரை காட்டிலும் இது அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளவில் வெளியீடு செய்யப்பட்டாலும், இந்தியாவில் இருந்து முக்கியமாக இந்திய மார்க்கெட்டை டார்க்கெட் செய்து இந்த ரெனால்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. 'பிரிட்ஜர் கான்செப்ட்' (Bridger Concept) என்கிற பெயரில் இந்த காரின் கான்செப்ட் மார்ச் 10இல் வெளியீடு செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் காரின் என்ஜின் ஆப்ஷன்கள் குறித்த புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன. ஆர்.பி3-கே2 (RB3-K2) என்கிற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டுவரும் இந்த புதிய ரெனால்ட் எஸ்யூவி காரில் பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒன்றாக, புதிய டஸ்டரில் வழங்கப்பட உள்ள 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கண்டிப்பாக இருக்கும் என்பது உறுதி.
அத்துடன், புதியதாக உருவாக்கப்படும் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம். இவற்றுடன், ஹைப்ரீட் (Hybrid) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) வெர்சன்களிலும் இந்த புதிய ரெனால்ட் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. எலெக்ட்ரிக் வெர்சனில் பேட்டரி ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 35 kWh மற்றும் 55 kWh பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

இந்த பேட்டரி ஆப்ஷன்கள் மூலமாக பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய ரெனால்ட் காரின் ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்சன்களின் அறிமுகங்கள் அடுத்த 2027 அல்லது 2028ஆம் ஆண்டில் இருக்கலாம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தில் தற்போதைக்கு 6 புதிய வாகனங்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய டஸ்டர் காருடன், டஸ்டர் காரை விட அளவில் பெரியதான பிக்ஸ்டர் (Bigster) காரும், அளவில் சிறியதான இந்த மினி டஸ்டர் காரும் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
டஸ்டர் அடிப்படையிலான இந்த மூன்று கார்களும் ரெனால்ட்டின் புதிய 'ஆர்-ஜிஎம்பி' (R-GMP) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளன. இவை மூன்றும் இந்தியாவின் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் அதிகரித்துவரும் தேவையை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக களமிறக்கப்படுகின்றன. மேலும் இவை தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சமீபத்தில் வெளியாகி இருந்த டீசரின்படி பார்க்கும்போது, பிரிட்ஜர் கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார் ஆனது மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) உள்ளிட்ட ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களின் உடலமைப்பில் அவற்றிற்கு விற்பனையில் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் பிரிட்ஜர் எஸ்யூவி கார் இப்போதைக்கு கான்செப்ட் வடிவமாகவே வெளியீடு செய்யப்பட உள்ளது. அதன்பின், அந்த கான்செப்ட்டில் இருந்து பிரிட்ஜர் 4-மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்க ரெனால்ட் நிச்சயமாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் இந்த 2026ஆம் ஆண்டின் இறுதிக்கு உள்ளாகவோ அல்லது 2027ஆம் ஆண்டின் துவக்கத்திலோ இந்த புதிய ரெனால்ட் கார் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்சன்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு நிச்சயமாக 2028 வரையில் ஆகும் என்பது உறுதி.
Source: Autocar Professional


Click it and Unblock the Notifications








