அடுத்த ஆண்டு க்யூ3 எஸ்யூவீ கார்: ஆடி தகவல்

Audi Q3
டெல்லி: அடுத்த ஆண்டு க்யூ3 எஸ்யூவீ காரை அறிமுகப்படுத்த ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனை ஆடி இந்தியா மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் பீட்டர் ச்வர்சேன்பெர் உறுதிபடுத்தியுள்ளார்.

ஆடியின் இந்த புதிய மாடல் எஸ்யூவீ கார் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

சந்தையில் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவீ காருக்கு நேரடி போட்டி கொடுக்கும் வகையில் இந்த புதிய கார் களமிறங்குகிறது.

பிஎம்டபிள்யூவின் எக்ஸ்1 எஸ்யூ பிரண்ட் வீல் டிரைவ்ம மட்டும் கொண்டது. ஆனால், ஆடியின் க்யூ3 ஆல்வீல் டிரைவுடன் வருகிறது.

அவுரங்காபாத்தில் உள்ள வோக்ஸ்வேகன் தொழிற்சாலையில், இந்த எஸ்யூவீ காரை தயாரிக்க ஆடி திட்டமிட்டுள்ளது.

ஆடிக்கே உரிய சிங்கிள் பிரேம் கிரில், வெட்ஜ் வடிவத்துடன் கூடிய முகப்பு விளக்குகள், ரன்னிங் விளக்குகள் என அனைத்து அம்சங்களும் இதிலும் உண்டு.

இந்த ஆண்டில் 5,000 கார்களை விற்பனை செய்ய ஆடி இலக்கு வைத்துள்ளது. வரும் 2020ம் ஆண்டில் ஆணடுக்கு 30,000 கார்கள் விற்பனை என்ற இலக்கை எட்டும் வகையில் அந்த நிறுவனம் புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது.

Most Read Articles
English summary
Audi has officially confirmed the launch of the Q3, its baby SUV in 2012. Speaking to Autocar India at the Le Mans 24 Hours race, Audi AG’s head of marketing and sales, Peter Schwarzenbauer said, “The Q3 will be good for the Indian market and we will bring this car to India next year.”
Story first published: Tuesday, June 28, 2011, 15:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X