உலக சுற்றுச்சூழல் தினம்:கார்களுக்கு இலவச புகை பரிசோதனை

Go Green
டெல்லி: ஆண்டுதோறும் ஜூன் 5ந் தேதிசர்வதேச அளவில் உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. சுற்று்சசூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், விழிப்புணர்வையும் மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குறிப்பாக, கார்கள் மூலம் அதிக அளவில் கார்பன் புகை வெளியிடப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரி்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கார்பன் புகை கட்டுப்பாடு அவசியத்தை வலியுறுத்தும் பிரச்சாரங்களை மேற்கொள்ள இருப்பதாக முன்னணி கார் நிறுவனங்களான ஸ்கோடா ஆட்டோ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள டீலர் பாயிண்டுகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கார்களுக்கு இலவச மாசுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செய்து, புகை பரிசோதனை சான்றிதழ் வழங்க இருப்பதாக ஸ்கோடா அறிவித்துள்ளது.

இதேபோன்று, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளில் சிறப்பு நிகழ்ச்சிகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரங்களையும் மேற்கொள்ள உள்ளது.

தவிர, நாடு முழுவதும் உள்ள செவர்லே டீலர் பாயிண்டுகளில் கார்களுக்கு இலவச கார்பன் புகை பரிசோதனை முகாம்களை நடத்தி சான்றிதழ்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று, பல முன்னணி கார் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.

Most Read Articles
English summary
Skoda Auto announced a day long ‘Free Pollution Check Up’ campaign on the occasion of “World Environment Day”. General Motors plans to celebrate the occasion with amazing activities to be carried off at Chevrolet’s centers across the nation to commemorate the day.
Story first published: Saturday, June 4, 2011, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X