மொத்த குடும்பத்தையும் ஏத்துனாலும் மீதி இடம் இருக்கும்! 34 கிமீ மைலேஜ்! ஆனா விலை முழுசா 5 லட்சம் கூட இல்ல!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெயாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14,885 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,118 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 233 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 1.54 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Maruti Suzuki Wagon R Side View

மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் ஓரளவிற்கு வீழச்சி என்றால், வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 14,885 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19,879 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 4,994 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 25.12 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Maruti Suzuki Wagon R

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் சமீப காலமாக இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பம் எஸ்யூவி ரக கார்களை நோக்கி நகர்ந்து வருகிறது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் வீழ்ச்சிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் இது மிகவும் குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜ வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மற்றும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலை, சிறப்பான மைலேஜ் ஆகிய காரணங்களால், வரும் மாதங்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றுடன் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுவதும், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று அதன் இட வசதி ஆகும். ஆம், மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், தாராளமான இட வசதிக்கும் பெயர் பெற்றது. இதன் காரணமாகவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகள் (1999ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது) கடந்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் இன்னமும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2026, 23:54 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report february 2026 25 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+