வெறும் 5 லட்சத்துக்கு மைலேஜை வாரி வழங்கும் எஸ்யூவி கார்! இந்தியாவையே மிரள விட போகும் மாருதி! நடுக்கத்தில் டாடா

இந்தியாவில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கான (Hatchback Cars) வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களில், மாருதி சுஸுகியும் (Maruti Suzuki) ஒன்றாகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) போன்ற ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை நீண்ட காலமாகவே மந்தமாகதான் இருந்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி ரக கார்களின் (SUV Cars) மீது திரும்பியிருப்பது இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இதை சரியாக புரிந்து கொண்ட டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டு டாடா பன்ச் (Tata Punch) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

Tata Punch Facelift

இது எஸ்யூவி ரக கார் என்றாலும் கூட, ஹேட்ச்பேக் ரக காரின் விலையிலேயே வாங்கி விட முடியும். இதனால் டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக டாடா பன்ச் திகழ்கிறது.

நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars February 2026), டாடா பன்ச் 3வது இடத்தை பிடித்துள்ளது. அதுவும் 28.77 சதவீத வளர்ச்சியையும் டாடா பன்ச் பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரியில் வெறும் 14,559 ஆக இருந்த டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கையானது, நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரியில் 18,748 ஆக உயர்ந்துள்ளது.

Tata Punch

அதாவது இம்முறை 4,189 டாடா பன்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 28.77 சதவீத வளர்ச்சியுடன், 3வது இடத்தை டாடா பன்ச் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகிய கார்கள் உள்ளன.

டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு முதல் காரணம் அதன் குறைவான விலைதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 5.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, டாடா பன்ச் காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

இதில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 17.78 செமீ ஹெச்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், பேடில் ஷிஃப்டர்கள் போன்ற வசதிகள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), டாடா பன்ச் கார் கொண்டுள்ளது.

மேலும் ஐசி இன்ஜின் வெர்ஷன் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் டாடா பன்ச் கிடைக்கிறது. டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காரின் விலையும் கூட மிகவும் குறைவுதான். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 9.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் பாஸ் (BAAS - Battery As A Service) முறையில் வாங்கினால், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்த முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 2.6 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

குறைவான விலை, அதிக வசதிகள் மற்றும் ஐசி இன்ஜின்/எலெக்ட்ரிக் என பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் போன்ற காரணங்களால்தான், டாடா பன்ச் இவி மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) கார்தான், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் நேரடி போட்டி மாடலாக உள்ளது.

ஆனால் கூடிய விரைவில், மாருதி சுஸுகி நிறுவனம், டாடா பன்ச் காருடன் நேருக்கு நேராக மோத உள்ளது. ஆம், டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டாடா பன்ச் காரை காட்டிலும், 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை குறைவான விலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் டாடா பன்ச் காரை போலவே, மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பும் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு வகையான பவர்ட்ரெயின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை இந்தியாவில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, இங்கிருந்து இடது கை டிரைவிங் மற்றும் வலது கை டிரைவிங் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக அடுத்த 2 வருடங்களுக்குள், இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், சிறப்பான மைலேஜை (Mileage) நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டியாக வரவுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய கார், எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கத்தை வலிமையாக்கி கொள்ள உதவும் என நாங்கள் கருதுகிறோம். இது மிகவும் விலை குறைவானது என்பதால், மிகவும் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் விற்பனையாகலாம். எனவே இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம், தற்போது இருப்பதை காட்டிலும், மேலும் வலிமையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 19, 2026, 17:19 [IST]
English summary
Maruti suzuki to launch tata punch rival micro suv in india check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+