வரிச்சலுகைக்காக வெரிட்டோ நீளத்தை குறைக்கும் மஹிந்திரா

Mahindra Verito
டெல்லி: வரிச்சலுகைக்காக வெரிட்டோ செடான் காரின் நீளத்தை குறைத்து ஹேட்ச்பேக் மாடலாக அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

மஹிந்திரா-ரினால்ட் உறவில் பிறந்த லோகன் செடான் கார் இந்திய மார்க்கெட்டில் அவ்வளவாக சோபிக்கவில்லை.

லோகனை சரிவர கவனிப்பதில்லை என்று கோபித்துக்கொண்டு, மஹிந்திராவுடனான உறவை முறித்துக்கொண்டது ரினால்ட்.

இதையடுத்து, லோகன் காரை வெரிட்டோ என பெயர் மாற்றத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது மஹிந்திரா. கடந்த ஆண்டு மொத்தம் 2,000 கார்கள் மட்டுமே விற்பனையான அந்த கார், மஹிந்திராவின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் கடந்த ஏப்ரல்-ஜூலை காலத்தில் மட்டும் 5,000 கார்கள் விற்பனையாகி இருக்கிறது.

இதனால், உற்சாகமடைந்துள்ள மஹிந்திரா வெரிட்டோவின் விற்பனையை மேலும் அதிகரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக, வெரிட்டோவை குறைந்த விலை கொண்ட ஹேட்ச்பேக் அல்லது நாட்ச்பேக் மாடலாக மாற்ற மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

செடான் ரகத்தை சேர்ந்த வெரிட்டோவுக்கு தற்போது 22 சதவீதம் கலால் வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், வெரிட்டோவின் நீளத்தை 4 மீட்டருக்குள் குறைத்து வரிச்சலுகை பெற மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வெரிட்டோவின் விலையையும் கணிசமாக குறைக்க முடியும்.

இதுகுறித்து மஹிநிதிரா விற்பனைப் பிரிவு மூத்த துணைத்தலைவர் அருண் மல்ஹோத்ரா கூறியதாவது:

"வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற விலையில் வெரிட்டோவை அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்காக, வெரிட்டோவின் நீளத்தை 4 மீட்டருக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், 12 சதவீத வரிச்சலுகையை பெற முடியும் என்பதால், காரின் விலையையும் கணிசமாக குறைப்போம்.

தற்போது வெரிட்டோ டீசல் மாடல் ரூ.5.6 லட்சம் முதல் ரூ.6.7 லட்சம் விலையிலும், பெட்ரோல் மாடல் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.4 லட்சம் விலையிலும் விற்பனை செய்கிறோம். புதிய வெரிட்டோ நிச்சயம் வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்.

அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் புதிய வெரிட்டோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.," என்றார்.

Most Read Articles
English summary
Mahindra will roll out a sub-four metre compact model of Verito, the rechristened Mahindra Logan, which is expected to attract only 10 per cent excise duty instead of the earlier 22 per cent. Also, it will have a lower price tag. The car is expected to be launched in six to eight months said Arun Malhotra, senior vice-president (sales and customer care). In April 2010, M&M bought out Renault’s 49 per cent equity stake in Mahindra Renault Private Ltd, renamed Logan as Verito and released it in the market with the new badging and minor facelifts a year later. The four-metre sedan, priced at Rs 5.6-6.7 lakh for the diesel version and Rs 4.5-5.4 lakh for petrol, reported poor sales of only 2,000 units last year, while sales went up to touch 5,000 units for this April-July.
Story first published: Saturday, August 20, 2011, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X