இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள்

Scorpio in Lankan Army
டெல்லி: இலங்கை ராணுவத்தில் ஆல் வீல் டிரைவ் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பபியோ கார்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ராணுவத்தின் கரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

இதன்படி, ராணுவ பலத்தை அதிகரிக்கும் விதமாக, அனைத்து சாலை நிலைகளிலும் அதிவேகமாக செல்லும் திறன் படைத்த 4 வீல் டிரைவ் கொண்ட ஸ்கார்ப்பியோ கார்களை இந்தியாவிலிருந்து இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளது.

முதல்கட்டமாக, மஹிந்திரா நிறுவனத்தின் 137 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யபட்டுள்ளது. இந்த கார்களை முறைப்படி ராணுவத்தில் சேர்க்கும் விழா சமீபத்தில் நடந்தது.

தவிர, ராணுவத்தில் சேர்ப்பதற்காக 2.2 லிட்டர் எம்-ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்ட மேலும் 485 ஸ்கார்ப்பியோ கார்களை தயாரித்து வழங்குமாறு அந்நாட்டு அரசு மஹிந்திராவிடம் ஆர்டர் கொடுத்துள்ளது.

ஸ்கார்ப்பியோ கார்களை இலங்கை ராணுவத்தில் சேர்க்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறியதாவது:

"ராணுவம் மற்றும் போலீஸ் துறைக்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் ஸ்கார்ப்பியோ காரை தேர்வு செய்துள்ளது மிகுந்த பெருமிதம் அளிக்கிறது.

4 வீல் டிரைவ் கொண்ட எல்எக்ஸ் மாடல் ஸ்கார்ப்பியோ காரை அவர்கள் தேர்வு செய்தனர். இந்த கார்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டவை.

இலங்கை ராணுவம் மற்றும் போலீஸ் துறையின் அன்றாட பணிகளில் ஸ்கார்ப்பியோ கார்கள் தோளோடு தோள் நிற்கும் என்பதில் ஐயமில்லை," என்று கூறினார்.

Most Read Articles
English summary
The Mahindra Scorpio is quickly getting an international fan following. The latest fan is none other than the Sri Lankan Government. To add muscle to its military and police division Sri Lanka has imported 137 Mahindra Scorpios. The Sri Lankan Police has also ordered for 485 Scorpios.
Story first published: Saturday, August 6, 2011, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X