பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க முடியாது? என்பது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக பெட்ரோலுடன், டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை குறித்து ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தற்போது பேசியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைகள் குறித்து தனக்கு தெரியும் என கூறியுள்ள அவர், இருந்தாலும் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க முடியாது என தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

இதுகுறித்து அவர் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தற்போது தடுப்பூசிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதுபோன்ற மிகவும் சிக்கலான காலகட்டத்தில், நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக நாங்கள் பணத்தை சேமிக்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு 8 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவதற்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்'' என்றார். தர்மேந்திர பிரதானின் இந்த பேட்டியை வைத்து பார்க்கும்போது, பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

அதே சமயம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. ஒருவேளை பெட்ரோல், டீசல் விலை வரும்காலத்திலும் குறையாவிட்டால், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டரை 100 ரூபாய்க்கு வாங்குவது என்பது வழக்கமான ஒன்றாக மாறி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

இதற்கிடையே ராகுல் காந்தியை தாக்கியும், தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கவலை ராகுல் காந்திக்கு இருந்தால், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் முதல்வர்களிடம், விலையை குறைக்கும்படி அவர் வலியுறுத்த வேண்டும் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

மஹாராஷ்டிராவில் ஆட்சி நடத்தும் சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வருகிறது. அதே சமயம் ராஜஸ்தானில் காங்கிரஸ்தான் ஆட்சி செய்து வருகிறது. எனவே அந்த மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் என்ற ரீதியில் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் ஒன்றையொன்றை குறை சொல்லி கொண்டிருப்பதை வாகன ஓட்டிகள் விரும்பவில்லை.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு ஏன் குறைக்க மறுக்கிறது தெரியுமா? வேணாம்... சொன்னா தாங்க மாட்டீங்க...

அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எண்ணம். வரிகளை குறைப்பது, ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது என இதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. ஆனால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருமானம் குறையும் என்பதால், இவை எல்லாம் நடக்குமா? என்பது சந்தேகம்தான்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
'Accept Rising Fuel Prices Are Problematic: Union Petroleum Minister Dharmendra Pradhan. Read in Tamil
Story first published: Wednesday, June 16, 2021, 21:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X