சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

புதிய டாடா சஃபாரி காரை பிரபல நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய சஃபாரி காரை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய சஃபாரி காரை டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளன.

சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

நடிகரும், பாடகரும், இயக்குனருமான பர்மிஷ் வெர்மாவிற்கு, பஞ்சாப் மாநிலத்தின் முதல் சஃபாரி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. ஆர்எஸ்ஏ மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து பர்மிஷ் வெர்மா புதிய டாடா சஃபாரி காரை டெலிவரி பெற்றுள்ளார். இது சண்டிகரில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் ஆகும்.

சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

இந்திய சந்தையில் டாடா சஃபாரி கார், 14.69 லட்ச ரூபாய் முதல் 21.45 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். டாடா சஃபாரி காரை டெலிவரி பெற்ற பின் பர்மிஷ் வெர்மா கூறுகையில், ''விற்பனைக்கு கொண்டு வரப்படுவது குறித்த அறிவிப்பு வெளியானது முதலே, புதிய டாடா சஃபாரியை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

குழந்தை பருவத்தில் இருந்தே டாடா சஃபாரி காருக்கு நான் ரசிகனாக இருந்து வருகிறேன். முந்தைய தலைமுறை டாடா சஃபாரியை சொந்தமாக வைத்திருக்கும் அதிர்ஷ்டமும் எனக்கு கிடைத்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரியை தற்போது அதிநவீன அவதாரத்தில் கொண்டு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

விரைவாக டெலிவரி செய்ததுடன் மட்டுமல்லாது, பஞ்சாப்பில் என்னை முதல் வாடிக்கையாளராக மாற்றியதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். டாடா சஃபாரி காரின், XZA+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை பர்மிஷ் வெர்மா வாங்கியுள்ளார். இந்த வேரியண்ட்டில் ஏராளமான வசதிகளை டாடா மோட்டார்ஸ் வழங்கியுள்ளது.

சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

இதில், பெரிய பனரோமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, கேப்டன் இருக்கைகள், டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீன், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகியவை முக்கியமானவை. 6 மற்றும் 7 சீட்டர் மாடல்களில் டாடா சஃபாரி கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் அடிப்படையில்தான் டாடா சஃபாரி உருவாக்கப்பட்டுள்ளது. ஹாரியர் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்மில்தான் புதிய டாடா சஃபாரியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹாரியரை புதிய சஃபாரி கார் நீளமானது மற்றும் உயரமானது.

சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...

அதே சமயம் டாடா ஹாரியரில் உள்ள அதே இன்ஜின்தான் புதிய சஃபாரியிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி டாடா சஃபாரியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Parmish Verma Takes The Delivery Of His New Tata Safari - Details. Read in Tamil
Story first published: Friday, February 26, 2021, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X