Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
32 லட்ச ரூபாய்க்கு ஃபேன்ஸி நம்பரை ஏலம் கேட்ட நபர்... கடைசியில் செய்த காரியத்தை பார்த்து ஆர்டிஓ ஆடிப்போய்ட்டாரு
காருக்கு ஃபேன்ஸி பதிவு எண் வாங்குவதற்காக 32 லட்ச ரூபாய்க்கு ஒருவர் ஏலம் கேட்டார். கடைசியில் அவர் செய்த காரியத்தால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்துடன் பொதுமக்கள் பலருக்கும் வருமானம் குறைந்தது. தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என்றில்லாமல் அரசாங்கமும் வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

குறிப்பாக ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் வெகுவாக குறைந்தது. புதிய வாகன பதிவு, ஃபேன்ஸி பதிவு எண்கள் ஏலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் ஆர்டிஓ அலுவலகங்கள் வருவாய் ஈட்டுகின்றன. ஆனால் ஊரடங்கு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் இந்த பணிகள் தடைபட்டதால், ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வருவாய் குறைந்தது.

இதில், குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆர்டிஓ அலுவலகமும் ஒன்று. இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு, வாகனங்களுக்கான ஃபேன்ஸி பதிவு எண்களை ஏலம் விடுவதன் மூலம் அகமதாபாத் ஆர்டிஓ அலுவலகம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்தது. ஆனால் கொரோனா பிரச்னைக்கு பின்பு, வருமானம் பல லட்ச ரூபாய் குறைந்து விட்டது.

ஆனால் இப்படிப்பட்ட நெருக்கடியான சமயத்திலும் கூட, தங்களது வாகனத்திற்கு தங்களுக்கு பிடித்தமான பதிவு எண்ணை பெறுவதற்கு பல லட்சக்கணக்கான ரூபாயை செலவழிக்கும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர். இந்த வகையில் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வாகனத்திற்கு பதிவு எண் பெறுவதற்கு 32 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டுள்ளார்.

தனக்கு விருப்பமான பதிவு எண்ணை பெறுவதற்காக அவர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் கேட்டார். ஆனால் அவர் யார்? என்பது தெரியவரவில்லை. எனினும் சரியான நேரத்தில் அவர் பணத்தை செலுத்தவில்லை. எனவே அவரது ஏலத்தை ஆர்டிஓ ரத்து செய்து விட்டார். இதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த காருக்கு தனக்கு விருப்பமான பதிவு எண்ணை பெறுவதற்கு அவர் விண்ணப்பித்தார். அந்த எண்ணை பெறுவதற்காக அவர் 32 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டார். எனவே அந்த விண்ணப்பதாரருக்கு அந்த எண்ணை நாங்கள் ஒதுக்கினோம். ஆனால் அவர் சரியான நேரத்தில் பணத்தை செலுத்த தவறியதால், அவரது ஏலத்தை ரத்து செய்துள்ளோம்'' என்றனர்.

அகமதாபாத் ஆர்டிஓ அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் 11,600 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 3,022 வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பதிவு எண் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ஃபேன்ஸி பதிவு எண் ஏலம் மூலமாக அகமதாபாத் ஆர்டிஓ அலுவலகத்திற்கு 1.09 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

இதுவே கடைசி மூன்று மாத கால அளவில் பார்த்தால் (செப்டம்பர், அக்டோபர், நவம்பர்), ஃபேன்ஸி பதிவு எண் ஏலம் மூலமாக 2.36 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இவ்வளவு பெரிய தொகைகளுக்கு ஃபேன்ஸி பதிவு எண்கள் ஏலம் எடுக்கப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.