டாடா சியரா காரை சோதனை செய்த பாரத் என்சிஏபி! ரிசல்ட்ட பாத்ததும் போட்டி நிறுவனங்களுக்கு நடுக்கம் எடுத்திருக்கும்
இந்திய சந்தையில் புதிய தலைமுறை டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள காரணத்தால், புதிய டாடா சியரா கார், மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.
ஆனால் வரும் காலங்களில், டாடா சியரா காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற பெரும்பாலான கார்களை போலவே, சியரா காரும், பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், சிறப்பான ரேட்டிங்கை பெற்றிருப்பதுதான் இதற்கு காரணம்.

பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Tests), டாடா சியரா கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் டாடா சியரா கார் 32க்கு 31.14 புள்ளிகளை ஸ்கோர் செய்து அசத்தியுள்ளது.
அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 44.73 புள்ளிகளை டாடா சியரா கார் ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் டாடா சியரா காருக்கு, 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கிடைத்துள்ளது. டாடா சியரா காரில் பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) சற்றும் பஞ்சம் இல்லை.

டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.
அதே நேரத்தில் டாடா சியரா காரின் டாப் வேரியண்ட்களில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரின் பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக இருக்கும் காரணத்தால்தான், அது பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது. இந்த சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங், வரும் காலங்களில், டாடா சியரா காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டாடா சியரா கருதப்படுகிறது. டாடா சியரா காரின் வருகை, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








