வெறும் 3.5 நாட்களில் உலகை சுற்றிவந்த இளம் அரேபிய பெண்!! உலக சாதனையானது...

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மிக குறைந்த நாட்களில் உலகை சுற்றி வந்து உலக சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 3.5 நாட்களில் உலகை சுற்றிவந்த இளம் அரேபிய பெண்!! உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் சேர்ப்பு

உலகம் முழுவதையும் சுற்றிவரும் பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள் பரவலாக இருக்க தான் செய்கின்றனர். இத்தகையவர்களின் பயண அனுபவங்கள் குறித்த செய்திகளை நமது தளத்தில் கூட பல முறை பார்த்திருக்கிறோம்.

வெறும் 3.5 நாட்களில் உலகை சுற்றிவந்த இளம் அரேபிய பெண்!! உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் சேர்ப்பு

அவர்களில் சிலர் காரில், பைக்கில், ஏன் சைக்கிளில் கூட பயணம் செய்வது உண்டு. இவ்வாறு பயணத்தில் ஈடுபடுபவர்கள் நேரத்தை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, நமக்கு பிடித்த இடங்களை பார்த்துவிட்டு வரவேண்டும் என்றுதான் நினைப்பர்.

வெறும் 3.5 நாட்களில் உலகை சுற்றிவந்த இளம் அரேபிய பெண்!! உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் சேர்ப்பு

ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கப்போவது உலக சாதனையை படைக்க வேண்டும் என்ற நோக்கில் குறைந்த காலத்தில் உலகை சுற்றிவர மேற்கொள்ளப்பட்ட பயணமாகும். இந்த பயணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த காவ்லா அல்ரோமைதி என்ற இளம்பெண் ஈடுப்பட்டுள்ளார். இவர் மருத்துவர் ஆவார்.

ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!

இவர் உலகை வெறும் 3 நாட்கள் 14 மணிநேரங்கள் 46 நிமிடங்கள் 48 வினாடிகளில் சுற்றிவந்துள்ளார். இந்த குறைவான நேரமே தற்போது உலக சாதனையாக அமைந்துள்ளது. சுமார் 208 நாடுகளை பார்வையிட்டுள்ள அல்ரோமைதியின் பயணம் கடந்த 2020 பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி சிட்னியில் நிறைவு பெற்றுள்ளது.

வெறும் 3.5 நாட்களில் உலகை சுற்றிவந்த இளம் அரேபிய பெண்!! உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் சேர்ப்பு

இந்த உலக சாதனை குறித்து அல்ரோமைதி பேசுகையில், "யுஏஇ-இல் கிட்டத்தட்ட 200 நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். நான் அவர்களது நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் அறிய விரும்பினேன். நான் எதிர்பார்த்தை போல் இந்த உலக சாதனையை படைப்பது மிகவும் கடினமாக இருந்தது.

வெறும் 3.5 நாட்களில் உலகை சுற்றிவந்த இளம் அரேபிய பெண்!! உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் சேர்ப்பு

குறிப்பாக இத்தகைய நோக்கத்துடன் விமான நிலையங்களிலும், விமானங்களிலும் பொறுமையாக இருப்பது சவாலாக இருந்தது. இந்த பயணத்தின்போது பல முறை இந்த பயணத்தை இதோடு நிறுத்திவிட்டு வீட்டிற்கு செல்வோம் என நினைத்தேன். ஆனால் அதற்கு எனது இலக்கு சம்மதிக்கவில்லை.

இந்த பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள ஊக்குவித்த எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். யுஏஇ-இல் ஏகப்பட்ட உலக சாதனைகள் அரங்கேறியுள்ளன. அதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என நினைத்தேன்.

வெறும் 3.5 நாட்களில் உலகை சுற்றிவந்த இளம் அரேபிய பெண்!! உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் சேர்ப்பு

உலக சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது எனக்கும் எனது சமூகத்தினருக்கும் கிடைத்த கௌரவமாகும். இந்த சாதனையை எனது நாட்டிற்கு நான் பரிசாக வழங்குகிறேன். எனது சாதனை பலருக்கு உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். வாழ்க்கையில் தங்கள் குறிக்கோள்களை நிறைவேற்ற ஒரு வழியைக் கண்டுபிடிக்க அனைவரையும் ஊக்குவிக்கிறேன், முடியாதது எதுவுமில்லை!" என்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Meet the Emirati adventurer who travelled the world in record-breaking time
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X